உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்
மே 01, 2000
கண்ணன் -என் காதலன் (3)
திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
1. மிக்க நலமுடைய மரங்கள்,- பல
விந்தைச் சுவையுடைய கனிகள் ,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் ,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு (திக்குத்)
2. நெஞ்சிற் கணல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமிலைக் கடல்கள், - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,- ஒரு (திக்குத்)
3. ஆசை பெறவிழிக்கும் மான்கள், -உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், -நல்ல
நேசக் கவிதைசொலும் பறவை, -அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு (திக்குத்)
4. தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத்தினிற் கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்)
5. கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்- ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன் -உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான்-ஒரு (திக்குத்)
6. ""பெண்ணே உனதழகைக் கண்டு மனம்
பித்தங்கொள்ளுதென்று நகைத்தான்-""அடி
கண்ணே, எனதிருகண் மணியே -உனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன். (திக்குத்)
7. சோர்ந்தே படுத்திருக்கலாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம் (திக்குத்)
8. என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் தனி
நின்றே இருகரமுங் குவித்து -அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன் (திக்குத்)
9. ""அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்றன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ? (திக்குத்)
10. ""ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்;-நின
தின்பம் வேண்டுமடி, கனியே,-நின்றன்
மோடி கிருக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழைய கள்ளைப் போலே (திக்குத்)
11.காதா விந்தவுரை கேட்டேன்-அட
கண்ணா வென்றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதக வில்லையிதற் குள்ளே-என்றன்
போதந் தெளிய நினைக் கண்டேன். (திக்குத்)
12. கண்ணா! வேடனெங்கு போனான்-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி! (திக்குத்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications