தமிழகத்தில் இன்று
அயோத்தி ராமர் கோயில் மாதிரி ஜனவரியில் முடிவு செய்யப்படும் - விஷ்வஹிந்து பரிஷத்
டெல்லி:
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலின் மாதிரி (மாடல்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்அமைப்பின் முக்கியப் பிரதிநிதி ஆச்சார்ய தர்மேந்திர மஹராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஹிந்து மதத் தலைவர்கள் கூட்டம் ஜனவரி மாதம் பிரயாகையில் நடைபெற உள்ளது. அப்போது, உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ளராமர் கோயிலின் மாதிரி இறுதி செய்யப்படும். ராமர் கோயில் கட்டுவது என்பது மத சம்பந்தமானது. இப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் தலையிடமுடியாது.
வாஜ்பாய் சிறந்த தலைவர். அவர் நாட்டின் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கவும், வறட்சி பாதித்த மக்களின் நலனுக்காகவும்எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கோயில் கட்டும் பணியில் அவர் தலையிடமுடியாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஹிந்து மதத் தலைவர்களுக்கு உதவி செய்யப்படும் என்று பாஜக கூறியதால்தான் மக்களவைத் தேர்தலில்பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தது என்பதை பிரதமர் மறந்துவிடக்கூடாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிப்பதை ஹிந்து மதத் தலைவர்கள் தங்களது உரிமையாகவும், முக்கியப் பணியாகவும் கருதுகின்றனர். ராமர் கோயில்கட்டும் பிரச்சினை தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு எந்த வகையிலும், கோயில் கட்டும் பணியைக்கட்டுப்படுத்தாது. ஹிந்து மதத் தலைவர்கள்தான் இது பற்றி இறுதி முடிவு எடுக்க முடியும்.
இடிக்கப்பட்ட இடத்திலேயே பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்அவர் மசூதி கட்டிக் கொள்ளட்டும். ஆனால், ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவர் மசூதி கட்டமுடியாது என்றார் அவர்.
ராமர் கட்டப்படவுள்ள இடத்தில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி ஹிந்து மதத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications