கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது
நடிகர் அஜீத்குமார் பிறந்த நாள் விழாவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடியதால் பெரும்கலாட்டா ஏற்பட்டது. அஜீத்தின் கார் கண்ணாடி, திருமண மண்டப ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.நெரிசலில் பெண் போலீசார் மீது விழுந்த ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
ரசிகர்களுடன் இரவு வரை இருந்து பிறந்த நாளை கொண்டாடத் திட்டமிட்டிருந்த அஜீத், கலாட்டா காரணமாகபாதியில் விழாவை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
அஜீத்தின் 29வது பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள கோல்டன் பேரடைஸ்திருமண மண்டபத்தில் நடந்தது. அஜீத் வருவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள்மண்டபத்தில் நிறைந்திருந்தனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் ரசிகர்களை சந்திக்க புது மனைவி ஷாலினியுடன் அஜீத் காரில் வந்திறங்கினார்.அவரது காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தி, பெருங் கூட்டத்திற்கிடையில் அஜீத் -ஷாலினியை மேடைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அஜீத்தை பார்க்க ஏராளமான ரசிகைகளும்வந்திருந்தனர்.
ரசிகர்கள் கூட்டத்தையும், நெரிசலையும் பார்த்த அஜீத், முதல் வேலையாக தனது மனைவி ஷாலினியை தனிக்காரில் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். ரசிகர்கள் கூட்டம் மண்டபத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் அஜீத்தை பார்த்து விட்டு வெளியே வராமல்உள்ளேயே நின்று கொண்டிருந்தனர்.
இதனால் வெளியே காத்திருந்த ரசிகர்கள் உள்ளே புக முண்டியடித்தனர். இந்த நெரிசலில் பாதுகாப்பிற்குவந்திருந்த பெண் போலீசார் மீது ரசிகர்கள் விழுந்தனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.
நெரிசலை பார்த்து பயந்து போன அஜீத், ரசிகர்கள் மத்தியில் பேசி விட்டு வெளியேறலாம் என்று நினைத்தார்.ஆனால், அந்த கூட்டத்தில் மைக் வயர் அறுந்து கிடந்தது. அதனால் மைக் வேலை செய்யவில்லை. எரிச்சலைடந்தஅஜீத், மாடியில் இருந்த அறையில் பாதுகாப்பாக நுழைந்து கொண்டார்.
அரை மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மேடைக்கு வந்தார். ரசிகர்களை பார்த்து நன்றி தெரிவித்தார். அப்போதுவெளியில் நின்று கொண்டிருந்த அஜீத் கார் மீது ரசிகர்கள் ஏறி, அஜீத்தை பார்த்து கையசைக்க முயன்றனர். அதில்ஓரிருவர் தவறி கீழே விழுந்ததில், கார் கண்ணாடி நொறுங்கியது.
இதற்கிடையில் நெரிசலை சமாளிக்க திருமண மண்டப கதவுகள் மூடப்பட்டன. கண்ணாடியால் ஆன அந்தகதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே மூச்சு திணறியவர்கள் வெளியே வந்தனர். இவ்வளவு நெருக்கடிகளுக்குபின்னர் 4 மணியளவில் அஜீத் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
""சினிமா என்பது முக்கியமல்ல. அது ஒரு பொழுது போக்கு மட்டுமே. எனக்கு பலமே ரசிகர்கள் கூட்டம் தான்.தாய், தந்தை, குடும்பம் இவற்றிற்கு பிறகு தான் நீங்கள் ரசிகராக இருக்க வேண்டும். கண்தானம், ரத்த தானம் செய்துமற்றவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அதை விட முக்கியமானது உழைப்பு. அதை ஒரு நாளும் நீங்கள் மறந்துவிடக் கூடாது என்று பேசினார். பின்னர் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications