தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தருகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அந் நாட்டின்ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது தவறு, பாகிஸ்தானில்பயங்கரவாதிகள் யாரும் இல்லை. யார் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா என்ன கருத்து கொண்டுள்ளது என்றும்,பயங்கரவாதம் என்றால் என்ன என்பது குறித்தும் பொதுவான விளக்கம் இப்போது தேவைப்படுகிறது.
உலகளாவிய பயங்கரவாதம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை தனது ஆண்டு அறிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்பயங்கவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுவதாககூறப்படும் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகிறது. எந்த வகையிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்தது இல்லை. காஷ்மீரில்செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை ஒடுக்க உலகநாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் எப்போதும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இனிமேலும், ஒத்துழைப்புத் தரும் என்றார்முஷாரஃப்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications