தமிழகத்தில் இன்று
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைவதில் பலன்இல்லை: திருநாவுக்கரசு
சென்னை:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுக வில் இணைவதால் அந்தக் கட்சிக்கு எந்த லாபமும் இல்லை.அவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை. ஜெயலலிதாவுக்கும் எந்த லாபமும் இல்லை என்று எம்ஜிஆர்அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறினார்.
சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் 500 பேர் கட்சியிலிருந்து பிரிந்து எம்ஜிஆர்அதிமுகவில் சேர்ந்தனர்.
இதற்கான இணைப்பு விழா சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம்தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருநாவுக்கரசு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
1972 ம் ஆண்டு அண்ணாதொழிற்சங்கம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. இப்போது அச்சங்கத்தைச்சேர்ந்த 500 பேர் அங்கிருந்து பிரிந்து எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியைஅளிக்கிறது.
அதிமுகவிலிருந்து சுமார் 200 ஒன்றிய, ஊரக, மாவட்டச் செயலாளர்களை ஜெயலலிதா நீக்கியுள்ளார். வரும்தேர்தலில் புதுமுகங்களை நிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரால் கட்சியிலிருந்துநீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைவதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. திமுகவுக்கும் எந்தலாபமும் இல்லை. ஜெயலலிதாவுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அனைவரும் அதிமுக வின் வளர்ச்சிக்காக ஆரம்பகாலத்திலிருந்துபாடுபட்டவர்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவர்கள் அனைவரும் திமுகவில் சேருவதை விட எங்கள்கட்சியில் சேருவதே நல்லது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவுடன் சேடப்பட்டிமுத்தையா, ரகுபதி, கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவிர அனைவரையும் எனக்குப் பிடிக்கும். அவர்கள் யாரும்எனக்கு எதிரிகள் அல்ல.
எங்கள் கட்சி தேசியஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். வாழப்பாடி ராமமூர்த்தி, ராமதாஸ்மோதலால் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications