தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

போலி நிதிநிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி: 3 பேர் கைது

காஞ்சிபுரம்:

போலி நிதிநிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று பேர் கும்பலைப் போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஓய்வுபெற்ற கூட்டுறவுசங்க துணை பதிவாளர் ஒருவரும் அடங்குவார்.

கூட்டுறவு சங்கப் பதிவாளர் எம்.எஸ்.கந்தசாமி 1989 ல் காஞ்சிபுரத்தில் கந்தன் பைனான்ஸ் என்ற நிதிநிறுவனத்தை ஆரம்பித்தார். அங்கு பொதுமக்கள்பணத்தை முதலீடு செய்தால் அவர்களுக்கு பல வகைகளில் லாபம் கிடைப்பதாக கவர்ச்சிகரமான திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்தார்.

மேலும் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவீதம் வட்டி அளிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதை நம்பி 133 க்கும்மேற்பட்ட முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்தார்கள். ஆனால் பணம் முதிர்வடைந்தும் அவர் பலருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும்அவர் தனது நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியிருந்த பல சலுகைகளையும் பண முதலீட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை.

இவரது நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்த வக்கீல் உள்பட பலர் இந்த மோசடி குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு தலைமையிலான போலீஸ் படை தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரைக்கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் 8 பேரை போலீசார் தீவிரமாய்த் தேடி வருகின்றனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+