தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மூப்பானரை முதல்வராக அறிவித்துத் தேர்தலை சந்திக்க சோனியாவுக்குசுவாமி கடிதம்

சென்னை:

அதிமுகவை ஓரங்கட்டி விட்டு, மூப்பனார் தலைமையில் புதியஅணியை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியோசனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் தமாகா தலைவர் மூப்பனாரை, அவரது இல்லத்தில்சந்தித்து பேசிய பின்னர் சுவாமி இந்நடவடிக்கையைமேற்கொண்டுள்ளார்.

சோனியாவுக்கு சுவாமி எழுதிய கடிதம் வருமாறு:

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக திராவிடர் கழக தலைவர் வீரமணிதலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் தமிழககாங்கிரசார் கலந்து கொள்கின்றனர். இது தமிழக மக்களுக்குஅதிர்ச்சியை தந்துள்ளது. வீரமணி விடுதலைப்புலிகளின்பிரதிநிதி. அவர் இந்தியர்களுக்கு எதிரானவர்.

ஜெயலலிதாவை நீங்கள் சந்திப்பதற்காக டெல்லியில் நான் தேனீர்விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். நீங்களும், ஜெயலலிதாவும்இணைந்து தேசிய அளவில் ஒரு மாற்று சக்தியாகஉருவாகுவீர்கள் என்று நம்பினேன். அப்போது தமிழக அரசியல்நிலவரம் ஸ்திரத்தன்மையோடு இருந்தது.

தோழி சசிகலாவின் நடவடிக்கையால் ஜெயலலிதா, அங்கிருந்துஇழுத்து வரப்பட்டார். இதனால் எதிர் விளைவுகள் உருவாகிவிட்டன.

சசிகலாவின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமாகி விட்டது. சசிகலாசொல்படி தான் ஜெயலலிதா செயல்படுகிறார். ஜெயலலிதாமீதுள்ள ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளன.

ஜெயலலிதாவுக்கு தண்டனை காலம் நெருங்கி வருவதைஉணர்ந்த சசிகலா, தற்போது ஜெயலலிதாவை ஓரங்கட்டி விட்டுகட்சியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அரசியலுக்குவருவதற்காக அவர் தனது ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

இதை அறிந்த மக்கள் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டுபோட்டு வெற்றி பெறச் செய்தனர். அப்படி ஒரு சூழ்நிலைஉருவாகிவிட்டதால் தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் ஒருபுதிய அணியை உருவாக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

அந்த அணி உருவானால், உங்கள் அழைப்பின் பேரில்திருநாவுக்கரசும் வருவார். மூப்பனாரை முதல்வராகவும்,திருநாவுக்கரசுவை துணை முதல்வராகவும் அறிவித்து, தேர்தலைசந்திக்க வேண்டும்.

திமுக, அதிமுக, விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழகத்தைவிடுவிக்க இந்த புதிய அரசியல் அணியை நீங்கள் உருவாக்கவேண்டும் என்று கடிதத்தில் சுவாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+