தமிழகத்தில் இன்று
ரூ. 60 லட்சம் மதிப்பில் தமிழகத்தில் "சுற்றுச்சூழல் போற்றும் சுற்றுலா திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியோடு சுற்றுச் சூழல் போற்றும் சுற்றுலா திட்டம் 60 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழகசுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய் கிழமையன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் உறுப்பினர்கள்பேசினர். அதற்கு பதிலளித்து சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
மாமல்லபுரம், தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் துணையோடு தமிழக கலாச்சாரம் பண்பாடு பற்றியவிழாக்கள் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சிக்காக பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) ஒன்று தீட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் முன்பதிவு வசதி கணினி மயமாக்கப்பட்டுள்ளதோடு, அதுபற்றிய விவரங்களை தனி வெப்சைட்டில் வெளியிட்டுள்ளோம். இமெயில் மூலமாகவும் வெளிநாட்டு பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதிமூலம் இதுவரை 20 ஆயிரம் பயணிகள் பயன் அடைந்துள்ளனர்.
14 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தொங்குபாலம் அமைக்கும் பணி திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. பூம்புகார்,பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, குற்றாலம் படகு குழாம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டல்களில் புதியவர்கள் (சீனியர் சிட்டிசன்), முன்னாள் படை வீரர்கள் ஆகியோருக்கு 25 சதவீத கட்டணச் சலுகைஅளிக்கப்படும்.
ஊட்டியில் 12 லட்ச ரூபாய் செலவில் 40 புதிய படகுகள் விடப்படும். கன்னியாகுமரியில் 25 லட்ச ரூபாய் செலவில் குடில்கள் மேம்படுத்தப்படும். மதுரை,ராமேஸ்வரம், மாமல்லபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் ரூ. 160 லட்ச ரூபாய் செலவில் புதிய ஹோட்டல்கள் கட்டப்படும்.
மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 60 லட்ச ரூபாய் செலவில் பிச்சாவரத்தில் சுற்றுச் சூழல் போற்றும் சுற்றுலா (எகோ-டூரிஸம்)மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் அறிவித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications