தமிழகத்தில் இன்று
மே 8-ம் தேதி புதுவையில் வெற்றி மாநாடு - மூப்பனார், ஆஸாத், நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்பு
புதுவை:
புதுவையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உருவானதன்நினைவாக மே 8-ம் தேதி வெற்றி மாநாடு நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் பி.சண்முகம் தெரிவித்தார்.
புதுவை மாநிலத்துக்கு 2000-2001-ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு பற்றி இறுதிசெய்ய புது தில்லி செல்லும் முன் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
புதுவையில் காங்கிரஸ்-தமாகா கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. இதை நினைவுகூறும்வகையில் மே 8-ம் தேதி வெற்றி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபிஆஸாத், அனில் சாஸ்திரி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.
புது தில்லியில் திட்ட ஒதுக்கீடு குறித்து திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன் ஆலோசனை நடத்த உள்ளேன். புதுவை மாநில வளர்ச்சிக்கு ஏற்ற வகையில்அதிக நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொள்வேன். கிராமப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளும் கருத்தில் கொள்ளப்படும்.
திட்ட ஒதுக்கீடு குறித்து ஏற்கெனவே பந்த்துடன் பேசியுள்ளேன். நிச்சயம் புதுவைக்குஅதிக நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவையில் சமச்சீர் விற்பனை வரியை அமல்படுத்துவதை புதுவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். நிச்சயமாக, எந்த வகையிலும் மக்களுக்குப்பாதிப்பு ஏற்படும் வகையில் புதுவை அரசு செயல்படாது என்றார் சண்முகம்.
முதல்வருடன் பொதுப் பணித்துறை அமைச்சர் பி. கண்ணன், தலைமைச் செயலர் டி.டி.ஜோசப், வளர்ச்சித் துறை ஆணையர் பத்மநாபன், திட்ட இயக்குநர் ஸ்ரீதரன் ஆகியோர்தில்லி சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications