தமிழகத்தில் இன்று
இயக்குநர்: சுந்தர்.சி.
இசை: சிற்பி
பாடல்கள்: பழனிபாரதி, விஜய்
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா, சுஜாதா, சங்கர் மஹாதேவன், ஹரிஹரன்
பொதுவாக லட்சுமி மூவி மேக்கர்ஸ் படம் என்றாலே பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படும். அதுவும் சுந்தர்.சி, பழனிபாரதிகூட்டணியென்றால் ஒரே கலக்கல்தான். பாடல்களில் வரிகள் ஜாலியாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
மறுபடியும் கண்ணன் வருவான் படத்தில் இவர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
சிற்பி டாம்டூமென்று ஜீபூம்பா வேலைகளெல்லாம் காட்டாமல் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அனைத்துப் பாடல்களிலும் கிராமிய மணம். கிராமியப் பாடல்களை விரும்பிக் கேட்கும் இசைப் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சோகப் பாட்டே இல்லீங்க. மில்லினியம் வருடத்திலுமா சோகம் என்று தவிர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஹரிகரன், சுஜாதா குழுவினர் பாடியிருக்கும் காத்துக்கு பூக்கள் சொந்தம் மிக மென்மையான பாடல் கதாநாயகன் தன் காதலிக்காக உருகி, உருகிப்பாடுவதாக அமைந்துள்ளது. தன் காதலியை விரைவில் காட்ட வேண்டுமென்றும் கடவுளிடம் வேண்டிக்கொள்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.வரிக்கு வரி ரசிக்க வைக்கிறது.
கட்டறுத்த தென்றலே பாடலும் அதே ரீதிதான். மிகவும் ரம்மியமாய் இன்னொரு தடவை ரிவர்ஸ் போட்டு கேட்க வைக்கிறது. சங்கர் மஹாதேவன்,சுஜாதா ஆகியோர் இந்தப் பாடலை தங்களது சொக்க வைக்கும் குரலில் பாடி அசத்தியுள்ளார்கள்.
ஹரிகரன், ஃபெபிமணி பாடியிருக்கும் வெண்ணிலவே பாடல் ஒரு தாலாட்டு.இது தவிர இரு டப்பாங்கூத்து பாட்டுக்கள். கூட மேல கூட வெச்சு, கடலக்காட்டுக் குயிலே என்று இரண்டு பாடல்கள். நம்மை ஆட வைக்கின்றன.கூடமேல... பாடலை சரண், யுகேந்திரன், சித்ரா பாடியிருக்கிறார்கள். கடலக்காட்டுக்குயிலே... சங்கர்மஹாதேவன், சுஜாதா பாடியிருக்கிறார்கள்.
சாப்பிட வாரீகளா மாமா... பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி ஆகியோர் பாடியுள்ளனர். ஜானகி உங்க குரலுக்கு வயசே ஆகாதா?.
கிராமங்களை கண்ணில் நிறுத்தும் இசை. கேட்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications