மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
புது தில்லி:
மனோஜ் பிரபாருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது முன்னாள் கேப்டன்கபில்தேவ்தான் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள்தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா தெரிவித்த குற்றச்சாட்டுக்குக் கருத்து தெரிவிக்க கபில் தேவ்மறுத்துவிட்டார்.
இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்,இந்திய அணி தோற்கும் வகையில் விளையாடும்படி மனோஜ் பிரபாகரைக் கபில்தேவ்கேட்டுக் கொண்டதாகவும் அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் கொடுக்க முன்வந்ததாகவும் கபில்தேவ் மீது பிந்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட் அரங்கில் பெரிய அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பிந்த்ராவின் குற்றச்சாட்டு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்ககபில் மறுத்துவிட்டார்.
பிந்த்ரா மற்றும் பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுவது பற்றி சிறிதுகுழப்பநிலையில் உள்ளேன். பிரபாகர் என்ன சொன்னார், எதன் அடிப்படையில்பிந்த்ரா இத்தகைய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லைஎன்றார் அவர்.
பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று பிரபாகர் ஒப்புக் கொண்டு அடுத்த சிலவிநாடிகளில் நான் எனது அறிக்கையை வெளியிடுவேன். இந்தமாதிரி குற்றச்சாட்டைபிந்த்ராவால் மட்டுமே கூறிமுடியும் என்றபோது நான் என்ன சொல்வது என்றுதெரியவில்லை என்றார் கபில்தேவ்.
என் மீது பிந்த்ரா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மட்டும் இப்போதுகூறமுடியும். எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டரீதியானஅடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பின்னர் அறிவிப்பேன் என்றார் கபில்தேவ்.
இதற்கிடையே, கபில்தேவ் மீது ஐ.எஸ். பிந்த்ரா குற்றச்சாட்டு கூறியுள்ளது குறித்துகபில்தேவின் பயிற்சியாளரும், துரோணாச்சாரியா விருது பெற்றவருமான டி.பி.ஆசாத் அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது. இதை என்னால் நம்பமுடியவில்லை. பலஆண்டுகளாக கபில்தேவை எனக்கு நன்றாகத் தெரியும். இது போன்ற காரியத்தைஅவர் ஒருபோதும் செய்யமாட்டார் என்று ஆசாத் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications