மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
டெல்லி:
1994ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாட வேண்டாம் என்று கூறி மனோஜ்பிரபாகருக்கு கபில் தேவ் பணம் கொடுத்தார் என புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிந்த்ரா இந்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
சரியாக விளையாடாமல் இருப்பதற்காக பிரபாகருக்கு ரூ. 25 லட்சம் கொடுத்த அந்த மனிதர் தான் இப்போது கிரிக்கெட் உலகில்மிகப் பெரிய மனிதர், அவர் இந்தியாவின் மைக்கேல் ஜோர்டனாகக் கருதப்படுகிறார். அவரது பெயர் தான் கபில்தேவ் என்றார்பிந்த்ரா.
கடந்த வாரம் சண்டீகரில் நடந்த சந்திப்பின்போது பிரபாகர் இந்தத் தகவலை தன்னிடம் தெரிவித்தாக பிந்த்ரா கூறினார். இதனைசிபிஐயிடமும் கூறப்போவதாக பிரபாகர் கூறியதாக பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கபில்தேவிடம் கேட்டீர்களா என நிருபர்கள் கேட்டபோது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவசரமாக லண்டன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இது குறித்து அவரிடம் உடனடியாக பேச முடியவில்லைஎன்றார்.
பின்னர் லண்டனில் அவர் பேசுகையில், ஐ.சி.சி. கூட்டத்தில் என்னிடம் ஏதும் கேட்கவேயில்லை. என்னிடம் கூட்டத்தில்விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பல உண்மைகளைச் சொல்லி அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி விடுவேன்என்ற பயத்தால் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.
வெறும் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுவிட முடியாது. அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கவேண்டும். அல்லது தெரிந்திருந்தும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதுபார்புடோசில் நடந்த போட்டியில் சில இந்திய வீரர்கள் வேண்டுமென்றே நன்றாக விளையாடவில்லை. இதற்கு மேட்ச்-பிக்சிங்தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. அப்போது டெண்டுல்கர் தான் கேப்டன். ஆனால், அது குறித்து குற்றம் சாட்டப்பட்டும்விசாரணையே நடக்கவில்லை என்றார் பிந்த்ரா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications