மே.இ. தீவுகள்-பாக். டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்: போர்டாவில் முதல் டெஸ்ட்
ஜார்ஜ்டவுன்:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான டெஸ்ட்கிரிக்கெட் தொடர் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
போர்டாவில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும்நியுசிலாந்து அணிகளிடம் படுதோல்வியைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிதற்போது புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஜிம்மி ஆடம்ஸ் தலைமையில்டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
பாகிஸ்தானும், உள்நாட்டில் இலங்கையிடம் படுதோல்வியைச் சந்தித்த பிறகு,மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வென்றமகிழ்ச்சியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு நாடுகளும், சமீபத்தில் விளையாட டெஸ்ட் தொடர்களில் தோல்விகண்டுள்ளநிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையில்களமிறங்குகின்றன.
இந் நிலையில், போர்டாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.இருப்பினும், போட்டி நடைபெறும் நாட்களில் மழை இருக்காது என்று போட்டிஅமைப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிவ்நாராயண் சந்தர்பால் மீண்டும் இடம்பிடித்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் சமீபத்திய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் விளையாடுவதுமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர்விளையாடவில்லை. காலில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதுஅந்த அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படும் அதே வேளையில், சுழற்பந்து வீச்சாளர்முஷ்டாக் அகமத் அந்த அணியில் விளையாடுகிறார்.
சமீபத்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் அணிக்குஅவர் வெற்றித் தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் 20முதல் 30 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்ப்பதாக அணியின்பயிற்சியாளர் மியான்தத் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications