தமிழகத்தில் இன்று
சென்னை:
விஜயகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வல்லரசுபடத்தின் திருட்டு விடியோ சி.டி.க்களை தயாரித்து விற்றதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2370 திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
சென்னையில் புதிய திரைப்படங்களின் திருட்டு விடியோ சி.டி.க்கள் விற்கப்படுவதாகசென்னை மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. மேலும், சி.டி.க்கள்எல்லாம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு சென்னைக்குக் கடத்தப்படுவதாகத்தெரிந்தது.
உடனே, சுங்கத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில்குற்றப்பிரிவுப் போலீஸார் ஈடுபட்டனர். இந் நிலையில், மலேசிய ஏர்லைன்ஸ்விமானம் மூலம் சென்னை வந்த மலேசியாவைச் சேர்ந்த சிராஜ் பின் அபுதாலிஃப்பிடம்போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் வல்லரசு படத்தின் திருட்டு விடியோ சி.டி.க்கள் 735 இருந்தன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில்அவருடன் விமானத்தில் வந்த நஸ்மா, அன்சார் பெய்க், குத்ரத்துல்லா ஆகியோரிடம்போலீஸார் சோதனை நடத்தினர். அவர்களிடமும் வல்லரசு படத்தின் சி.டி.க்கள்இருந்தன.
4 பேரிடமிருந்தும் மொத்தம் 2370 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications