கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

Subscribe to Oneindia Tamil

கலர் டிவி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை:

ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட கலர் டி.வி ஊழல் வழக்கு மே 8 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிகாலத்தின் போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியது தொடர்பாக ரூ 10.16 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஜெயலலிதா,சசிகலா, செல்வகணபதி உள்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை 2--வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் அரசுத்தரப்புசாட்சிகளை மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா மனு ஒன்றை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தனிநீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

பின்னர் ஐகோர்ட்டில் ஜெயலலிதா தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.

இந் நிலையில், கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மே 5-ம் தேதிக்குள் குறுக்கு விசாரணை முடித்துவிடவேண்டும் அரசு தரப்புவழக்கறிஞர்களுக்கு நீதிபதி ராதாகிருஷ்ணந் உத்தரவிட்டார். ஆனால், விசாரணை நடைபெறாத நிலையில் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+