தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நிதி நிறுவனத்திடம் வாங்கிய கோடிகளை திருப்பித் தராத சிவாஜி, சரத்குமார்
சென்னை:

ஆர்.பி.எப். நிதி நிறுவனத்தில் (ராயபேட்டை பெனிபிட் பண்ட்) நடிகர்கள் சிவாஜி கணேசன், சரத் குமார், பாக்கியராஜ் ஆகியோர்கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் செயல்பட்ட பெரும்பான்மையான நிதி நிறுவனங்களைப் போல இந்த நிறுவனமும் முதலீட்டாளர்களுக்குப்பணத்தைத் திருப்பித் தராமல் திடீரென மூடப்பட்டது. சுமார் 4.60 பில்லியன் அளவுக்கு இதில் ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடுசெய்துள்ளனர். இந்த நிதியை இந் நிறுவனத்தால் திருப்பித் தர முடியவில்லை.

இந்த நிறுவனம் இப்போது புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது. இதன் புதிய சேர்மன் ஏ.ஆர். ராவ் சென்னையில் நிருபர்களிடம்கூறியதாவது:

சிவாஜி கணேசன் மட்டும் 16 மில்லியன் கடன் வாங்கியுள்ளார். சரத் குமார் 37 மில்லியனும், இயக்குனர் பாக்கியராஜ் 6.61மில்லியனும் கடன் வாங்கியுள்ளனர்.

இவர்கள் தவிர பாண்டியராஜன் 30.65 லட்சமும், ராம்கி 25.49 லட்சமும் வாங்கியுள்ளனர். சிவாஜி மாத இறுதிக்குள் கடனைதிருப்பித் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், சரத் குமார் கடனை திருப்பிக் கொடுப்பது குறித்து அக்கரையே காட்டாமல் இருக்கிறார். அவர் கொடுத்த செக்குகள்பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டன. அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

பல நிறுவனங்கள், அமைப்புகளுக்கு எந்தவிதமான அடமானமும் இல்லாமல் பெரும் அளவில் கடன் வழங்கிவிட்டோம்.இவர்கள் இப்போது கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வருவதால் முதலீடு செய்த பொது மக்களுக்கு பணத்தையும்வட்டியையும் திருப்பி வழங்க முடியாத நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுவிட்டது.

பெரும் அளவில் எங்களிடம் கடன் வாங்கிய பிற நிறுவனங்களில் பாலாஜி குரூப் (2.31 மில்லியன்), ஜே.எம். பாண்டே (870மில்லியன்), பிரதீப் கோத்ரி (400 மில்லியன்), அல்சா குரூப் (360 மில்லியன்) ஆகியவை முக்கியமானவை. பிற நிறுவனங்கள்சுமார் 960 மில்லியன் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் உள்ளன.

கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காத எஸ். ஸ்ரீநிவாசுலு ரெட்டி என்பவர் முன் ஜாமீன் வாங்கிக் கொண்டு கைதாகாமல் தப்பிவருகிறார்.

இந்த நிறுவனத்தில் முன்பு தலைவராக இருந்த எஸ். சுப்பிரமணியன் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த கணக்குக்கு மாற்றிவிட்டுபெருமளவில் பணத்தை சுருட்டியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் தனது மகன் கட்டி வரும் ஹோட்டலிலும் இந்தநிறுவனத்திலிருந்து பணத்தை சுருட்டி முதலீடு செய்துள்ளார்.

அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ராவ் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+