தமிழகத்தில் இன்று
(நமது நிருபர்)
சசிகலா என்னை கட்டுப்படுத்தவில்லை, நான் சுதந்திரமானவள் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
தமாகா உள்ளிட்ட தோழமை கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் பற்றி பேசி வரும் சூழ்நிலையில் ஜெயலலிதா தமது நிலையை சனிக்கிழமைதெளிவுபடுத்தினார். இதன்மூலம் தோழமை கட்சிகளின் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். ""இது எங்கள் கட்சியின் கருத்து. அதை சொல்வதில் எந்ததயக்கம் இல்லை என்றார்.
சென்னையில் சனிக்கிழமை அவர் அளித்த பரபரப்பான பேட்டி வருமாறு:
கட்சியில் நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் உள்கட்சி விவகாரம். இருந்தாலும் சொல்கிறேன். கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சி உள்ளேன். அதனால்கட்சி புதிய தெம்புடனும், உற்சாகத்துடனும் நிமிர்ந்து நிற்கிறது. ஆயிரம் மடங்கு வலிமை பெற்றுள்ளது. அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குவலிமை பெற்றுள்ளது.
இனிமேலும் களை எடுப்பு நடவடிக்கைகள் தொடருமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது. அது என்னுடைய தனிப்பட்ட உரிமை. அதைப் பற்றிவெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
எங்கள் கட்சியில் மொத்தமே 50 மாவட்டச் செயலாளர்கள் தான். அதில் 39 பேர்களை மாற்றியுள்ளோம். ஆனால், 48 பேரை மாற்றி விட்டதாக பத்திரிகைகள்எழுதுகின்றன. மூன்று பேர் துரோகம் செய்ததால் தூக்கி எறிந்தேன். அவர்களை தூக்கி எறிந்து விட்டதால், அவர்கள் எல்லாம் எம்ஜிஆர் விசுவாசிகள்,மீதமிருப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் விசுவாசிகள் அல்ல என்பது நகைப்பிற்குரியது. (கட்சியின் புதிய நிர்வாகிகளும் எம்ஜிஆர் காலத்து பிரமுகர்கள் தான்என்பதை ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு விளக்கினார்).
எங்கள் கட்சி விதிப்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இப்போது சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறோம். எனவே இடையில் எந்த மாற்றங்களையும் செய்யும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு.
பாமக எங்கள் கூட்டணியில் சேருமா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம்.
எங்கள் கட்சி எம்.பி. தினகரனை, டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி சந்தித்தது பற்றியெல்லாம் தினகரனிடம் கேளுங்கள். யூகத்திற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. தேர்தலுக்கு பின்னர் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும். பெரும்பான்மை கிடைக்கும். தேர்தல் எப்போது வந்தாலும்சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழகம் இந்த ஆட்சியில் அவல நிலையில் உள்ளது. நான்காண்டுகளாக ஆட்சி நடைபெறவில்லை. திமுக அரசு செயலிழந்து விட்டது. அதிமுகவில் நான்தினகரனை முன்னிலைப்படுத்துவதாக கூறுவதெல்லாம் கற்பனை. நான் எல்லோரையும் தான் முன்னிலைப்படுத்துகிறேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில்இருப்பதாக சொல்வதெல்லாம் பிதற்றல். நான் சுயமாக சிந்தித்து தான் செயல்படுகிறேன். நான் சுதந்திரமானவள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications