தமிழகத்தில் இன்று
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள 40,000 இலங்கை ராணுவத்தினரை மீட்க இந்திய ராணுவத்தை அனுப்ப முடியாது என மத்தியஅரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இது தொடர்பான இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ஆனால், மனிதாபிமானஅடிப்படையிலான உதவிகள் மட்டும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்திய அரசு கூறியுள்ளது.
மனிதாபிமான அடிப்படை உதவிகள் என்றால் என்ன? என்பது குறித்து மத்திய அரசிடமிருந்து விளக்கம் ஏதும் கூறப்படவில்லை. ஆனால், முதலில்இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக் கூடாது என சென்னையில் பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்தவுடன் தனதுநிலையை மாற்றிக் கொண்டுவிட்டார்.
இலங்கை தொடர்பாக மத்திய அரசின் எந்த நடவடிக்கைக்கும் திமுக அரசு தடையாக இருக்காது என அறிவித்துள்ளார்.
இந் நிலையில் 1987ம் ஆண்டு இலங்கைக்கு முன்பு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புப் படையின் (ஐ.பி.கே.எப்.) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கல்கத்துடன்ஒரு பேட்டி:
கேள்வி: இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்ப வேண்டுமா?
பதில்: தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
கே: முன்பு படையை அனுப்பியதே இந்தியா?
ப: இப்போது படையை அனுப்பினால் இந்திய வெளிநாட்டுக் கொள்கைக்கும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும்.
கே: நமது அண்டை நாடு பிரச்சனையில் இருக்கும்போது நாம் உதவ வேண்டாமா?
ப: இலங்கைக்கு மனிதாபிமான, பொருளாதார, தூதரகரீதியிலான உதவிகளை அளிக்கலாம். ஆனால், ஆயுதங்களையோ, ராணுவ உதவியையோ அளிக்கவேண்டியதில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்று ஏதாவது செய்தால், இந்திய-இலங்கை உறவில் சிக்கல் ஏற்படும்.
கே: 1987ம் ஆண்டில் யாழ்பாணத்துக்கு இந்திய அமைதி காப்புப் படையை அனுப்பியது தவறா?
ப: இல்லை. பெரும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளுப்புப் பின் இலங்யிைன் வடகிழக்குப் பகுதிகளை ஐ.பி.கே.எப். தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அந்த நிலையில் தான் அப்போதைய அதிபர் பிரேமதாசா புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியப் படையை வெளியேறச் செய்தார். அதுஎங்களுக்கு கேவலமான உணர்வை ஏற்படுத்தியது. இலங்கை அரசு நன்றிகெட்டு நடந்து கொண்டது.
இவ்வாறு கல்கத் கூறினார்.
1987ல் அனுப்பப்பட்ட இந்தியப் படை சுமார் மூன்றரை ஆண்டுகள் அங்கு அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டது. இதில் 1,500 இந்திய வீரர்கள்பலியாயினர். இந்தப் படையினர் இந்தியாவுக்குத் திரும்பியபோது அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியஅமைதி காப்புப் படையை வரவேற்க செல்ல மாட்டேன் என்று கூறி அந்தப் படையினருக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications