தமிழகத்தில் இன்று
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது என்ற நிலைக்கு பெரும்பாலானதமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரிந்து கிடக்கும் இந்த கட்சிகள் அனைத்துமே இந்த விஷயத்தில் ஒன்று கூடியுள்ளன.
தமிழகத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு நண்பர்கள் அதிகமில்லை. தமிழகத்தின் 3 முக்கிய கட்சிகள்கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாலும் அந்தக் கட்சிகள் அனைத்துமே இலங்கை அரசுக்கு உதவக் கூடாது என்ற நிலைஎடுத்துள்ளதாலும் பிரதமர் வாஜ்பாய் இவ் விஷயத்தில் இலங்கைக்கு உதவ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திமுக, மதிமுக, பாமக மட்டுமின்றி மாநில பாரதீய ஜனதா கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இதே நிலையைத் தான்எடுத்துள்ளன.
இதில் பாமக மிகத் தீவிரமாகவே புலிகளை ஆதரித்து வருகிறது. தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுளளார்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எப்.) பொதுச் செயலாளர் ஞானசேகரன் கூறுகையில்,இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு டிமோர் பிரிந்தது மாதிரி நடவடிக்கை எடுத்து இலங்கையிலிருந்து ஈழத்தைப் பிரிக்கவேண்டும் என்றார். இதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றார்.
தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி மட்டும் தான் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறி வருகிறார்.முக்கிய கட்சியான அதிமுக தலைவர் ஜெயலலிதாவிடமிருந்து இவ்விஷயம் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை.
இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு:
இந்நிலையில் இலங்கையையொட்டிய தனது கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது. யாழ்பாணத்திலிருந்துபடகு மூலம் தப்பி வந்த 14 அகதிகளை கடற்படை மீட்டு ராமநாதபுரம் கொண்டு வந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications