தமிழகத்தில் இன்று
(நமது நிருபர்)
சென்னை:
விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் தடை விதிக்கப்படுவதற்கு மூலக் காரணமாக விளங்கியவள் நான். எனவே புலிகள் விஷயத்தில் என்னுடையநிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை கூடிய அதிமுக செயற்குழுவுக்கு பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
இலங்கை பிரச்னையில் எங்கள் கட்சியின் நிலை, அங்கு அமைதி திரும்ப வேண்டும். தொடர்ந்து நடைபெற்றும் வரும் சண்டைக்கும், இனப் படுகொலைக்கும்முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்கான அரசியல் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட வேண்டும் என்பது தான். அங்குள்ள தமிழர்களுக்குமுழு உரிமையும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும்.
இப்பிரச்னையில் இலங்கை அரசு இப்போது இந்திய உதவியை நாடியுள்ள நிலையில் இதுபோன்ற தீர்வு காண மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசியல்தீர்வு மட்டுமே இனப்படுகொலைக்கு முடிவை தரும் என்பது எங்கள் கருத்து. இதற்கு மேல் இப்பிரச்னை பற்றி நாான் எதுவும் கூறவிரும்பவில்லை.
இப்பிரச்னையில் மத்திய அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி கருத்துக்களை கேட்டறிந்திருக்க வேண்டும். அந்த கூட்டத்திற்கு தமிழகத்தில் பெரியகட்சி என்ற முறையில் எங்களையும் அழைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக முதல்வரை மட்டும் அழைத்துப் பேசியது கண்டிக்கத்தக்கது.
அவரும் இப்பிரச்னையில் தீர்வுக்கான உறுதியான ஆலோசனை எதையும் கூறவில்லை என்றே தெரிகிறது. இருப்பினும் இந்திய உதவி என்பது இலங்கை தீவில்அமைதியை திரும்பக் கொண்டு வருவதாக தான் இருக்க வேண்டும்.இலங்கை அரசு பேச்சுவார்த்தை மூலம் தான் இப்பேச்சுவார்த்தையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றோ அல்லது வேறு ஆலோசனைகளோ நாங்கள் கூறமுடியாது.
அது அந்நாட்டின் உள்விவகாரம். ஆனால், நம்டைய உதவிகள் கூட எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் கருத்து கூற முடியும். மனிதாபிமானஉதவிகள் கூட செஞ்சிலுவை சங்கம் மூலம் தான் நடைபெற வேண்டும். ஆயுதங்களோ அல்லது தளவாடங்களோ அவர்களுக்கு வழங்கப்படக் கூடாது.
விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் தடை விதிக்கப்படுவதற்கு மூலக் காரணமாக விளங்கியவள் நான். எனவே புலிகள் விஷயத்தில் என்னுடையநிலைப்பாட்டில் எந்த மாற்றம் இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications