தமிழகத்தில் இன்று
மும்பை:
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இம் மாத இறுதியில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின்கேப்டனாக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டாக்காவில் இம் மாதம் 28-ம் தேதி துவங்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதே ஆகிய அணிகள் பங்குகொள்கின்றன.
இப் போட்டியில் பங்கு கொள்ளும் இந்திய அணிக்கான தேர்வு தேர்வுக் குழுத்தலைவர் சந்து போர்டே தலைமையில் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்திய அணிக்கான வீரர்களும் அப்போது தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வுக் கூட்டத்தில் தற்போது கேப்டனாக உள்ள கங்குலியையே மீண்டும் கேப்டனாகநியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 25 பேர் கொண்ட இந்திய அணியும்தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்குப் புனேயில் மே 15 முதல் 24-ம் தேதி பயிற்சிஅளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் ஆசியக் கோப்பைக்கான 14 பேர் கொண்டஇந்திய அணி தேர்வு செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களில் ராகுல் திராவிட், அனில் கும்ளே ஆகியோர்இங்கிலாந்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், பயிற்சியில் இவர்கள்கலந்து கொள்ளமாட்டார்கள்.
வினோத் காம்ப்ளிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வி.வி.எஸ். லக்ஷ்மண்நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி, பஞ்சாபின் ரிதீந்தர் சோதி,பரோடாவின் ஜாகிர் கான், ஒரிஸாவின் தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், முகம்மது அசாருதீன், அஜய் ஜடேஜா,ராகுல் திராவிட், ஜேக்கப் மார்ட்டின், எஸ்.எஸ். தாஸ், முகம்மது கெய்ஃப், ராபின் சிங்,அனில் கும்ப்ளே, அஜிக் அகார்கர், முரளி கார்த்திக், நயான் மோங்கியா, ஜாகிர் கான்,ஹேமங் பதானி, ரிதீந்தர் சோதி, ரிஷிகேஷ் கனிட்கர், அமித் பண்டாரி, சபா கரீம், நிகில்சோப்ரா, எஸ். ஸ்ரீராம், வினோத் காம்ப்ளி, டி. குமரன், எஸ், ரமேஷ், சுனில் ஜோஷி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications