தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
நிலக்கரி வழக்கு: மீண்டும் சிக்கினார் ஜெயலலிதா

டெல்லி:

நிலக்கரி இறக்குமதி வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலாதா விடுவிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.

இதனால் ஜெயலலிதா மீதான சட்டத்தின் பிடி இறுகியுள்ளது. விடுவிக்கப்பட்ட வழக்கிலிருந்து மீண்டும் ஜெயலலிதாசிக்கியுள்ளார்.

அதிமுக ஆட்சி கால ஊழல்கள் குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் நிலக்கரி இறக்குமதி வழக்கில் ஜெயலலிதாகுற்றவாளியல்ல என அறிவித்து அவரை விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமும் ஜெயலலிதா குற்றவாளியல்ல என அறிவித்தது.

இதையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்த்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமஸ், நீதிபதிலோத்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜெயலலிதாவை விசாரிக்க உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. வெறும் போலீஸ்அறிக்கையை மட்டும் பார்த்துவிட்டு ஜெயலலிதாவை அந்த நீதிமன்றம் விடுவித்ததாகத் தெரிகிறது.

தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் சாந்திபூஷன் ஆஜரானார். அவர் வாதாடுகையில், நிலக்கரி இறக்குமதியை எதிர்த்துஅன்றைய பொதுப்பணித்துறை செயலாளர் பைல்களில் குறிப்பு எழுதியுள்ளார். இதை படித்துப் பார்த்த பின்னர் தான் ஜெயலலிதாஅதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த முறைகேடான இறக்குமதியால் அரசுக்கு 35 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதுஎன்றார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்த உத்தவிட்டது.அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரடியாக ஆஜராக வேண்டிய அவசியமில்லை என கூறிய நீதிபதிகள்ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆஜராக தயார் எனஜெயலலிதா எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த நிலக்கரியை இறக்குமதி செய்ய அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எதிர்ப்புத்தெரிவித்தார். நிலக்கரியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நிலக்கரியின தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் தனதுகுறிப்பில் எழுதியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+