தமிழகத்தில் இன்று
மணிலா:
ஐ லவ் யூ வைரசைப் பரப்பியது பேங்க் ஒன்றில் வேலை செய்யும் காதல் ஜோடி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களுக்கு ஐ லவ் யூ என்ற பெயரில்ஈ மெயில் கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவர்களின் கம்யூட்டர்கள் எல்லாம் ஸ்தம்பித்தன.
அமெரிக்க வெள்ளை மாளிகை, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் பல கம்யூட்டர்கள் செயலிழந்தன. அரசுஅலுவலகங்களில் உள்ள பல கம்யூட்டர்கள் செயல் இழந்தன. இதனால் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம்ஏற்பட்டது.
உளவுத்துறை விசாரணை:
இதையடுத்து அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அவர்கள் விசாரணையில்பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்துதான் இந்த வைரஸ் ஏவி விடப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதற்குப் பின்னணியில் வாலிபரும் ஒரு பெண்ணும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்துஉளவுத்துறை விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியது.
காதல் ஜோடி:
உளவுத்துறையின் தீவிரவிசாரணையில் இந்த ஐ லவ் யூ வைரசைக் ஏவி விட்டவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ளமணிலாவில் பாங்காக் நகரைச் சேர்ந்த காதல் ஜோடி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
27 வயதான ரியோமெல் ரமானஸ் மற்றும் அவரது காதலி ஈர்னி டி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள்இருவரும் பேங்கில் வேலை செய்து வருகிறார்கள்.
இதையடுத்து ரியோமெல் கைது செய்யப்பட்டான். காதலி ஈர்னி டியைப் போலீசார் தேடி வருகிறார்கள்.
அவர்கள் ஏன் வைரசை ஏவி விட்டார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இதை எந்தக் கம்யூட்டர் மூலம் ஏவிவிட்டார்கள் என்றும் தெரியவில்லை. இதுகுறித்துப் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications