தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை இனப் பிரச்னையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
மேலும் இப்பிரச்னையில் தமிழ் ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்பது எங்கள் கட்சியின் கொள்கை. அதை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னையில் புதன் கிழமையன்று டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி:
இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவு காட்டி எழுதும் பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் நன்றி. சில பத்திரிகைகளும், எழுத்தாளர்களும்எதிராக எழுதுவது வருத்தம் அளிக்கிறது. 2.2.97 அன்று சென்னையில் எங்கள் கட்சிக் கூட்டத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இலங்கை அமைச்சர் தொண்டைமான்ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அநீதியை தடுக்க வேண்டும் என்று ஜார்ஜ் பெர்னாண்டசும், இந்தியா தலையிட்டு இலங்கை அரசுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டமானும் பேசினர்.
இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிட்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இதுதான்சரியான தருணம். திருச்சியில் எங்கள் கட்சி செயற்குழுவில் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
ஆனாலும், இது எங்கள் கட்சியின் தீர்மானம். இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலியுறுத்தி சங்கடப்படுத்த விரும்பவில்லை. இதுபற்றி நேரடியாக எதுவும்நாங்கள் வலியுறுத்தமாட்டோம். எத்தகைய தீர்வு நல்லது என்பதை இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.
இப்பிரச்னையில் விடுதலைப்புலிகள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நிான் எதுவும் சொல்ல முடியாது. அதுபற்றி அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். தனி ஈழமா அல்லது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கும் வகையிலான அரசியல் தீர்வா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், எத்தகைய தீர்வாக இருந்தாலும் அதை இந்தியா தான் தலையிட்டு ஏற்படுத்த வேண்டும். வேறு நாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. 2 ஆயிரம்ஆண்டுகளாக இலங்கைக்கும், தமிழகத்திற்கும் பாரம்பரியத் தொடர்பு இருந்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தான் அந்த உரிமை உண்டு. இஸ்ரேலுக்கோ,பாகிஸ்தானுக்கோ இதில் தலையிட அருகதை இல்லை.
இந்திய - இலங்கை உறவு பற்றி ஜெயின் கமிஷன் விசாரணையின் போது முதல்வர் கருணாநதி தெளிவாக கூறியிருக்கிறார். பூகோள ரீதியாக தமிழகம்,இலங்கையும் அருகருகே அமைந்துள்ளன. முந்தைய காலத்தில் யாழ்ப்பாணம், தஞ்சாவூர் கலெக்டரின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளதாக வரலாறு.கோடியக்கரையில் இருந்து பார்த்தால் காங்கேசன் துறைகம் தெரியும் என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக வைகோவும், ராமதாசும் பேசி வருவதால், அவர்களை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றுகூறியுள்ள வாழப்பாடிக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications