தமிழகத்தில் இன்று
பான்:
ஜெர்மனிக்கு வர அனுமதி கேட்டு விண்ணப்பித்து வரும் இந்திய சாப்ட்வேர் நிபுணர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஜெர்மன் தனது நாட்டுக்கு சாப்ட்வேர் தொழில்துறையில் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களைஅனுமதிப்பது குறித்து அறிவித்தது. இதற்கு அந் நாட்டின் இன வெறி அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
வெளிநாட்டு சாப்ட்வேர் நிபுணர்களுக்கு கிரீன் கார்ட் வழங்குவது குறித்து அந் நாட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.ஆனால் அதற்குள்ளேயே ஜெர்மனிக்கு வர அனுமதி கேட்டு இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்கஆரம்பித்துள்ளனர்.
மே மாதத்தில் கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 264 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ் விஷயத்தில்பல்கேரியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. பல்கேரியர்களிடமிருந்து 214 விண்ணப்பங்கள்வந்துள்ளன.
ஜெர்மனியின் சென்ட்ரல் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி (இசட்.ஏ.வி.) தான் இந்த விண்ணப்பங்களை பெற்று வருகிறது. கடந்தமாதம் 207 பல்கேரியர்களும் 152 இந்தியர்களும் விண்ணப்பித்திருந்தனர். ஜெர்மனியில் கிரீன் கார்ட் எனறால் நிரந்தரமாகதங்குவதற்கான ஆவணம் என்று அர்த்தமில்லை. இந்த கார்ட் கிடைத்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்துபணியாற்ற முடியும். அவ்வளவு தான்.
இசட்.ஏ.வியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவில் தான் உலகிலேயே மிகச் சிறந்த கம்ப்யூட்டர் நிபுணர்கள்உள்ளனர். பல ஜெர்மனி நிறுவனங்கள் இந்தியாவில் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள கம்ப்யூட்டர்நிறுவனங்களுடன் தெடார்பு வைத்துள்ளன என்றார்.
ஆனால், இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களை அழைக்கும் அந் நாட்டின் யோசைனைக்கு முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஜர்கன்ரட்கர்ஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இந்தியர்கள் வந்தால் ஜெர்மானியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிடும்என்கிறார்.
ஜெர்மனிக்கு சுமார் 20,000 சாப்ட்வேர் நிபுணர்கள் தேவை. இவர்களை வெளிநாடுகளில் அழைத்து வர அதிபர் ஷிரோடர்திட்டமிட்டுள்ளார். எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவில்லை.
இதையடுத்து ஜெர்மன் அரசுக்கும் தனியார் சாப்ட்வேர் துறையினருக்கும் இடையே கடந்க 2ம் தேதி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.இதன்படி வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வரும் சாப்ட்வேர் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ஜெர்மன் மார்க் வரைஊதியம் வழங்கலாம். (ஒரு மார்க் 21 ரூபாய்க்கு சமம்).
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications