எப்படி இருந்த சீரியல் நடிகர் விஜய் ஆதிராஜ் இப்படி மாறிட்டாரே? வெளியான போட்டோ.. அதிர்ந்த 90ஸ் கிட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது எத்தனையோ புது புது சீரியல்கள் வந்திருந்தாலும் 90ஸ்களின் பேவரைட் சீரியல் நடிகர்கள் ஒரு சிலர் எங்கே போனார்கள்? என்று பல ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் விஜய் ஆதி ராஜ். சீரியலில் ஸ்டைலாக நடந்து வருவது, தொகுப்பாளராக கலகலப்பாக பேசுவது என ஒரு காலத்தில் சின்ன திரையில் இவரை பார்க்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிஸியாக இருந்தார்.

ஆனால் சமீப காலமாக அவரை அதிகமாக சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள், அட இது விஜய் ஆதிராஜா? எப்படி இருந்தவர் இப்போ ஆளே மாறிட்டாரே? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Vijay Adhiraj Vijay Adhiraj Latest Photo Vijay tv

நடிகர் விஜய் ஆதிராஜ் ஆரம்பகாலம்

நடிகர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்ட விஜய் ஆதிராஜ் 90ஸ் கால கட்டத்தின் ஆரம்பத்திலேயே சின்னத்திரையில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் உண்டு. சுழல், கணேஷ் வசந்த், சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, ஆனந்தம் உட்பட பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களிலும் சீரியல்களிலும் நடித்து இருந்தார். அதுபோல அந்த காலத்தில் விஜய் ஆதி ராஜ் சீரியல் என்ற ஒரு வட்டத்துக்குள்ள மட்டும் இல்லாமல் தொகுப்பாளராகவும் தனக்குன்னு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை பார்த்திருந்தார். சன் டிவியில் அப்போதுதான் சீரியலில் பார்த்திருப்போம் பிறகு விளம்பர இடைவேளையில் ஜெயா டிவியிலோ அல்லது விஜய் டிவியிலோ சேனல் மாற்றினால் அங்கே அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பார்.

Vijay Adhiraj Vijay Adhiraj Latest Photo Vijay tv

சின்னத்திரை நடிகர்

இப்படி எல்லா சேனல்களிலும் ஆல்ரவுண்டராக வலம் வந்த விஜய் பிறகு சின்னத்திரையில் வருவதை படிப்படியாக குறைத்து விட்டார். அதற்கு பிறகு புத்தகம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து தனது பயணத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.

இப்படியான நிலையில் தான் சமீபத்தில் சோசியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாக மாறி இருக்கும் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அவரை மீண்டும் சீரியலில் பார்க்க வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டு வருகிறார்கள். இதை பார்த்து அவர் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Vijay Adhiraj Vijay Adhiraj Latest Photo Vijay tv

நடிகர் விஜய் ஆதிராஜ் கம்பேக்

அதில், 90ஸ் மற்றும் 2k ஹிட்ஸ்களான உங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் காட்டிய அன்பால் நான் திக்கு முக்காடி போய்விட்டேன். என்னுடன் மீண்டும் இணைந்தது உங்களுக்கு குழந்தை பருவத்தின் அழகான நினைவுகளை கொண்டு வந்ததாக சொல்வதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. அந்த நினைவுகளை உங்களுக்குள் ஒருபோதும் இறக்க விடாதீர்கள். இனிமேல் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.

90ஸ் மற்றும் ஆரம்பகால 2k நினைவுகள் சுவாரஸ்யமான கதைகளை பகிர போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய பழைய தடயம் என்று சீரியலில் நினைவுகளையும் பகிர தொடங்கப் போவதாக கூறியிருக்கிறார். அந்த சீரியலில் டைட்டில் ட்ராக்கை இசையமைத்தவர் யார்? என்று ரசிகர்களுக்கு ஒரு கேள்வியையும் போட்டு இருக்கிறார். அதற்கு பலரும் கமெண்ட்ஸ்களை குவிக்கிறார்கள்.

விஜய் பெயரை சொன்னதும் கேட்ட சத்தம்.. கடுப்பான அமீர்.. அடுத்த நொடியே பார்த்திபன் வைத்த அரசியல் பஞ்ச்
அதுபோல ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதற்கு இந்த புகைப்படம் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் கொஞ்சம் டிங்கரிங் பெயிண்டிங் பண்ணுனா நாங்களும் ரெடி ஆகிடுவோம் என்று ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார். விஜய் ஆதி ராஜ் இப்போது தலைமுடியும், தாடியும் நரைத்து ஆளே மாதிரி இருந்தாலும் அவர் பேச ஆரம்பித்ததும் பழைய கனெக்ட் ரசிகர்களுக்கு திரும்ப வந்துவிட்டது.

அதோடு ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை, பழைய கதைகளை மட்டும் சொல்லாதீங்க.. மீண்டும் சீரியலுக்கு வாங்க என்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+