தமிழகத்தில் இன்று
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர்கள் வருடம் ஒன்றிற்கு 1.48 கோடிக்கு டீ குடிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சராசரியாகப் பார்க்கப் போனால் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா அமைச்சரவையில் நாள்ஒன்றிற்கு அனைத்து அமைச்சர்களும் சேர்த்து 150 - 200 கப் டீ குடிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முதல்வர் ராம்பிரகாஷ் குப்தாவிடம் கேள்விஎழுப்பினர். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் உள்பட 91 மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளனர்.
இவர்களில் முதல்வர் தவிர 90 அமைச்சர்களுக்கும் ஒதுக்கும் பட்ஜெட் ஆண்டுதோறும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில்அதிகரித்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் நடத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கே மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்வரிப்பணத்தின் பெரும் பகுதி போய்விடுகிறது.
அமைச்சர்கள் ஒவ்வொருவரின் ஆடம்பரத் தேவைக்காக மாதம் ஒன்றிற்கு ஒரு அமைச்சருக்கு 3 லட்ச ரூபாய்செலவிடப்படுகிறது. ஆண்டு ஒன்றிற்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் இதரப்படி ரூ 10, 000 என்றுஅமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதுவும் லட்சக்கணக்கில் செலவாகிவிடுகிறது. இதைஅமைச்சர்கள் தங்களது இருப்பிடத்திற்கும், புதிய பங்களாக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரமோத் திவாரி இதுகுறித்து நீச்சல்குளத்துடன் கூடிய பங்களாஅமைப்பதற்கும் நீச்சல்குளத்தில் குளித்துக் கொண்டே டீ அருந்துவதற்கும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்வரிப்பணத்தில் பெரும்பாலும் அடங்கி விடுகிறது என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
பல தொகுதிகளில் இருந்து அமைச்சர்களைச் சந்திக்க வருபவர்களுக்கு அமைச்சர்கள் தங்கள் சொந்தக் காசில் டீயும், சிற்றுண்டியும் வாங்கிக்கொடுப்பார்களா? ஆனால் அரசுச் செலவில் அவர்களுக்கு ராஜமரியாதைஅளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இதுகுறித்துத் தெரிவித்த முதல்வர் ராம்பிரகாஷ்குப்தா கூறுகையில் அமைச்சர்களுக்குச் செலவிடப்படும்ஆடம்பரச் செலவுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications