தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மே 10, 2000

கண்ணம்மா - என் காதலி - 6

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!(1)


வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!(2)


வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமது நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!(3)


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா(4)


வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணு மொழி நாணுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்ம(5)


காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே; நல்ல உயிரே கண்ணம்மா!(6)


நல்லவுயிர் நீ யெனக்கு , நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!(7)


தாரையடி நீ யெனக்கு தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவ மாய்ச் சமைந்சாய்! உள்ளமுதே! கண்ணம்மா!(8)

(அடுத்தது கண்ணன் என் ஆண்டான்)

Back To Index

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+