கோயம்பேடு லாட்ஜில் தங்கியிருந்த பெண்.. யாருமே எதிர்பார்க்கல! சென்னை போலீசுக்கு காத்திருந்த ஷாக் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, ஒரே நளில், 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகி அதிர்ச்சியை தந்திருந்தன.. இந்த கொடுமை இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளது.. நாளுக்கு நாள் அப்பாவி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது சென்னைவாசிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறார் 25 வயது நர்ஸ்.. தன்னுடைய தோழியுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம் போல் மருத்துவமனைக்கு டியூட்டிக்கு நடந்து சென்றுள்ளார்..

Koyambedu Lodge issue

சென்னை நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் ஆவின் பஸ் ஸ்டாண்டு அருகே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், அட்ரஸ் கேட்பது போல நடித்து நர்ஸிடம் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நர்ஸ் அளித்த புகாரின் பேரில், ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ததில், அந்த நபர் அயனாவரத்தைச் சேர்ந்த தியானேஷ்வர் (25) என்பது கண்டறியப்பட்டது.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள இவர், தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வருவதும், ஏற்கனவே இவர் மீது இன்னொரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது போலீசார் தியானேஷ்வரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

கோயம்பேடு லாட்ஜில் பாலியல் கொடுமை

அந்த சம்பவத்தின் அதிர்ச்சி முடிவதற்குள் கோயம்பேடு பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. அம்பத்தூரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண்.. இவர் தன்னுடைய நண்பரான கொளத்தூரைச் சேர்ந்த கோகுலுடன் கோயம்பேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

அந்த அறைக்கு கோகுலின் நண்பர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த லோகேஷ், 26, மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஹட்ரிக்ஜான் ஆகியோரும் வந்துள்ளனர். அப்போது 4 பேரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. மது போதையில், கோகுல், லோகேஷ் மற்றும் ஹட்ரிக்ஜான் ஆகிய 3 பேரும் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

போலீசுக்கு போன இளம்பெண்

அத்துடன் மது அருந்திய நிலையில், அந்த பெண்ணை போட்டோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில், கோயம்பேடு போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.

பிறகு ஆண் நண்பர்கள் 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு மகளிர் போலீசார், கோகுல், லோகேஷ் மற்றும் ஹட்ரிக்ஜான் ஆகிய 3 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
மற்றொருபுறம் லாட்ஜ்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+