தமிழகத்தில் இன்று
சென்னை:
வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணத்தை வரவேற்று கல்லறை கட்டி, அதற்கு ஆண்டு விழா நடத்திக் கொண்டிருக்கின்றனர் அதிசயத்தம்பதிகள்!.
இதுவரை கேட்டறியாத செய்திக்கு சொந்தக்காரர்களான அந்த தம்பதிகள் வாழும் ஊர் வள்ளியூர் அருகில் உள்ள வடக்கன்குளம்.திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் வடக்கன் குளம் உள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த தம்பதி அய்யாத்துரை நாடார்- பாக்கிய செல்வம்.
அய்யாத்துரை நாடாருக்கு வயது 88. அவரது மனைவி பாக்கியசெல்வத்தின் வயதோ 85.
இருவருக்கும் மூன்று பிள்ளைகள். மூத்தது மகள், பெயர் தாயம்மாள். அவருக்கு வயது 62. அடுத்தது மகன், பெயர் சுவாமிதாஸ். வயது 58.மூன்றாவது மகள், பெயர் ரஞ்சிதம். வயது 54.
இந்த மூவர் வழியில் 9 பேரன் பேத்திகளும், அவர்கள் மூலம் 10 கொள்ளுப் பேரன் பேத்திகளும் உள்ளனர்.
தற்போது பேரன் பேத்திகளின் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்கும் இந்த தம்பதிகளுக்கென கல்லறை கட்டப்பட்டு தயார் நிலையில்உள்ளது. இப்போதல்ல; 21 ஆண்டுகளாக அந்த கல்லறை காத்திருக்கிறது. வடக்கன்குளத்தில் இருந்து புதியம்புத்தூர் செல்லும் வழியில்டங்குவிளை குருசடி என்ற இடத்தில் தனக்கும், மனைவிக்கும் என இரண்டு கல்லறைகளை கட்டி தயார் நிலையில் வைத்துள்ளார்அய்யாத்துரை.
1979ம் ஆண்டு இந்த கல்லறைகளை கட்டியுள்ளார். அருகருகே கட்டப்பட்டுள்ள இந்த கல்லறைகளில் இடதுபுற கல்லறை மனைவிக்கும்,வலதுபுறக் கல்லறை தனக்கும் என்று மிகவும் மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் 88 வயதான அய்யாத்துரை.
சாவை கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு மத்தியில் தங்களது மரணத்தை உற்சாகத்துடன் வரவேற்பதாக சொல்கின்றனர் இத்தம்பதிகள்கோரஸாக. அதனால் தான் கல்லறை கட்டி தயாராக இருக்கிறோம் என்கின்றனர்.
இந்த விசித்திர சிந்தனை அய்யாத்துரை நாடாருக்கு எப்படி வந்தது? என்பது பற்றி அவர் கூறுகையில், ""எங்களுக்கு திருமணமாகி 65ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு பைபிள் மீது அதிக நம்பிக்கை உண்டு. பைபிளில் யோசேப்பு தனக்காக கல்லறை ஒன்றை தயாராகவைத்திருந்ததாகவும், அந்த கல்லறையில் தான் இயேசு கிறிஸ்துவை அடக்கம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதைப் படித்த எனக்கும் ஏன் நமக்கு நாமே கல்லறை கட்டக் கூடாது என்ற தூண்டுதல் ஏற்பட்டது. அதன் விளைவாக 21 ஆண்டுகளுக்குமுன்பு இந்த கல்லறைகளை கட்டினேன். இந்த கல்லறைகள் கட்டப்படும்போது நானே இதன் குழிக்குள் படுத்து ஓய்வு எடுத்ததுண்டு என்றுகூறிச் சிரித்தார்.
கல்லறை கட்டியதோடு நிற்கவில்லை, அதற்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் கல்லறை விழாவும் நடத்துகிறார். கல்லறையை சுற்றி பந்தல்,தோரணங்கள் கட்டி, ஊரையே அழைத்து விமரிசையாக கொண்டாடுகிறார். இவ்வாண்டில் நடைபெற்ற கல்லறை விழாவில் 300 பேர்பங்கேற்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கிறிஸ்தவ மதப்படி ஜெபத்துடன் விழா துவங்கியதும், பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. வந்திருந்தோருக்கெல்லாம் "பாயசம் வழங்கிஉபசரித்து அனுப்பினார் அய்யாத்துரை.
கல்லறை கட்டி கர்த்தருடைய அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என்று சொல்லும் அய்யாத்துரை நாடார் - பாக்கிய செல்வம் தம்பதியைவாழ்த்திக் கொண்டே சென்றனர் வந்திருந்தோர் எல்லாம்.
மரணத்துடன் விளையாடும் இந்த அதிசய தாத்தா, பாட்டி நீடுழி வாழ வாழ்த்துவோம்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications