தமிழகத்தில் இன்று
மணிலா:
ஐ லவ் யூ வைரசைப் பரப்பியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வாலிபர் வைரஸ் பரப்பியதற்குப் போதியஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த வாரம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களுக்கு ஐ லவ் யூ என்ற பெயரில்ஈ மெயில் கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவர்களின் கம்யூட்டர்கள் எல்லாம் ஸ்தம்பித்தன.
அமெரிக்க வெள்ளை மாளிகை, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் பல கம்யூட்டர்கள் செயலிழந்தன. அரசுஅலுவலகங்களில் உள்ள பல கம்யூட்டர்கள் செயல் இழந்தன. இதனால் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம்ஏற்பட்டது.
இதையடுத்து அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அவர்கள் விசாரணையில்பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்துதான் இந்த வைரஸ் ஏவி விடப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதற்குப் பின்னணியில் வாலிபரும் ஒரு பெண்ணும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்துஉளவுத்துறை விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியது.
உளவுத்துறையின் தீவிரவிசாரணையில் இந்த ஐ லவ் யூ வைரசைக் ஏவி விட்டவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ளமணிலாவில் பாங்காக் நகரைச் சேர்ந்த காதல் ஜோடி என்று கண்டுபிடிக்கப்பட்டது. 27 வயதான ரியோமெல்ரமானஸ் மற்றும் அவரது காதலி ஈர்னி டி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் பேங்கில் வேலைசெய்து வருகிறார்கள்.
இதையடுத்து ரியோமெல் கைது செய்யப்பட்டான். காதலி ஈர்னி டியைப் போலீசார் தேடி வருகிறார்கள்.அவர்கள்ஏன் வைரசை ஏவி விட்டார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இதை எந்தக் கம்யூட்டர் மூலம் ஏவி விட்டார்கள்என்றும் தெரியவில்லை.
வைரஸ் குற்றவாளி விடுதலை:
மேலும் கைது செய்யப்பட்ட ராமனசிடம் இந்த வைரஸ் குறித்து போதுமான அளவு சாட்சியங்கள் இல்லை.அவர்தான் இந்த வைரசைப் பரப்பினார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையில் அவரைமேற்கொண்டு விசாரணை நடத்த முடியாது என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் அவரது காதலி இதுதொடர்பாக இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications