தமிழகத்தில் இன்று
டெல்லி:
நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து இன்று (பந்த்) பொதுவேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கஅமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
மேற்கு வங்கம். கேரளத்தில் அரசே ஆதரவு தெரிவித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுவிட்டன. இங்கு தான் மிக அதிகமான பாதிப்புஉள்ளது. மற்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பந்த் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமையல் கியாஸ் விலை உயர்வு, உரமானியம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஆகியவற்றைக் கண்டித்தும், மத்திய அரசின் புதியபொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் துறையை தனியார் மயமாக்குதலைக் கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம்நடைபெறுகிறது.
இந்தப் பொது வேலை நிறுத்தத்தால் இந்தியா முழுவதும் பல இடங்களில் பஸ், ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொழிற்சங்க நிறுவனங்களானசி.ஐ.டி.யூ, டி.யு.சி.சி., எச்.எம்.எஸ், ஆகியவை இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள், மற்றும் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன.தமிழகத்தில் திமுக தொழிற்சங்கமான எல்பிஎப் நிறுவனம் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிமுக மற்றும் தமாகா, கட்சிகள்வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷாக்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. வழக்கம்போல் ஆட்டோக்கள் ஓடுகின்றன.
வணிக நிறுவனங்கள் திறந்துள்ளன:
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கம்,தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆகியோர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்தேஉள்ளன.
போலீஸ் எச்சரிக்கை:
வேலை நிறுத்தம் என்ற பெயரில் சாலைகளில் நிற்கும் வாகனங்களுக்கு தீ வைப்பதோ, கல் வீசுவதோ, பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல்போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications