வாத்தி ரெய்டு.. அடித்து ஆடும் விஜய்.. ஆபிஸ் ஆபிஸாக போய் ரெய்டு நடத்திய டீம்.. அரசு அதிகாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஒரு வாரமாக திடீர் ரெய்டுகள், சோதனைகள், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களையும், லஞ்ச ஒழிப்பு முறைகேடுகளையும் தடுப்பதற்காக, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 7 அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ.22.33 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay massive DVAC action in Tamil Nadu 7 Government officers one after the other arrested

அடித்து ஆடும் விஜய்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கோரிப் பெற்ற அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் பொறி வைத்து பிடிக்கும் யுக்திகள் மூலம் 7 பேர் பிடிபட்டனர்.

கடந்த வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வு குழுவினருடன் இணைந்து திடீர் சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது, உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.12.46 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரசு அலுவலகங்களில் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற வரும் பொதுமக்களை அலைக்கழித்து, லஞ்சம் வாங்கும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த பணமாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகனச் சோதனைச் சாவடிகளிலும்லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு வாகன ஓட்டிகளிடமிருந்தும், சரக்கு லாரி உரிமையாளர்களிடமிருந்தும் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.9.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த ஒரு வார கால சோதனைக்கு பின் மட்டும் ரூ.22.33 லட்சம் ரொக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 ஊழியர்களில் 3 வழக்குகள் கவனம் பெற்றுள்ளன

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த அதிகாரி ஒருவர், கட்டிட ஒப்புதல் வழங்குவதற்காக ஒரு நபரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது அதிகாரிகளிடம் சிக்கி கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில், புதிதாக வாங்கப்பட்ட நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக ஒரு விவசாயியிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.

சென்னை வேளச்சேரி ஜே-7 போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர், விபத்து அல்லது வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட புகார்தாரரின் இருசக்கர வாகன ஆவணங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் பின்னணி குறித்தும், இந்த ஊழல்களில் தொடர்புடைய பிற அதிகாரிகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+