தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் 100 பேர் பலியாகியுள்ளனர்.
வியாழக்கிழமை விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
யாழ்பாணத்துக்குள் நுழைய உதவும் நவத்குளி பாலத்தை ராணுவம் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயேவைத்திருப்பதாக அரசு செய்தித்துறை இயக்குனர் ஆரியா ரூபசிங்கே கூறினார். அவர் கூறுகையில்,யாழ்பாணத்துக்குள் நுழைய முயன்ற விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டனர்.
ஆனால், நவத்குளி பாலத்தின் வடகிழக்குப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள்கைப்பற்றியுள்ளனர். அந்தப் பகுதிக்கு மேலும் விடுதலைப் புலிகள் வந்துசேராமல் ராணுவம் தடுத்து வருகிறது.அதே நேரத்தில் கூடுதல் ராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டு புலிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டுவருகின்றனர்.
அரியாலியில் மட்டும் 50 விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடந்ததை ராணுவத்தினர் பார்த்தனர். இந்த உடல்களைமீட்க முயன்ற புலிகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
தனகிலப்பு பகுதியில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். கிலாலி பகுதியில் படகில் சென்ற புலிகள் மீதுகடற்படையினர் தாக்குதல் நடத்தி 4 புலிகளைக் கொன்றனர்.
ராணுவத் தரப்பில் 33 வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் 2 அதிகாரிகளும் அடங்குவர். அரியாலி, தனகிலப்புபகுதியில் இவர்கள் பலியாயினர்.
தொடர்ந்து யாழ்ாணத்துக்குள் நுழைய புலிகள் முயன்று வருகின்றனர். இலங்கையிடம் உள்ள கிபிர் விமானம்மூலம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
போர் நடக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு புலிகள்அறிவுருத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications