தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
யாழ்பாணத்தை புலிகள் வென்றாலும் தமிழ் ஈழத்தை இந்தியா அங்கீகரிக்காது

டெல்லி:

தமிழ் ஈழத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகக் கூறினார்.

யாழ்பாணத்தை புலிகள் கைப்பற்றிவிட்டால் கூட இலங்கை தொடர்பான இந்தியாவின நிலையில் மாற்றம்இருக்காது என்றார் வாஜ்பாய்.

பார்லிமென்டில் மத்திய ஹாலில் நிருபர்களிடம் வாஜ்பாய் கூறுகையில், நாங்கள் முதலிலேயே கூறியபடி இலங்கைஅரசும் விடுதலைப் புலிகளும் சேர்ந்து கேட்டுக் கொண்டால் தான் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில்ஈடுபடுவோம்.

இலங்கையில் நிலைமை மிக மோசமாகத் தான் உள்ளது. யாழ்பாணத்தை புலிகள் பிடித்துவிடும் நிலைஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னும் யாழ்பாணத்தை இலங்கை ராணுவம் பல முறை விடுதலைப் புலிகளிடம்இழந்துள்ளது என்றார். ( 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் யாழ்பாணத்தை இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.)

இலங்கை அரசு இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறதா?, இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தானிலிருந்துஆயுதங்கள் ஏற்றிய விமானம் இலங்கை வந்து சேர்ந்ததா எனக் கேட்டபோது, பல்வேறு நாடுகளில் இருந்தும்இலங்கை ஆயுதங்களை வாங்கி வருகிறது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+