தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
புலிகள் தனி ஈழத்தை அடைந்தால் மகிழ்வேன்: கருணாநிதி

சென்னை:

விடுதலைப் புலிகள் போராட்டம் மூலமோ அல்லது பேச்சுவார்த்தை மூலமோ தமிழ் ஈழத்தை அடைந்தால் மகிழ்ச்சிஅடைவேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அதற்காக தமிழகத்தில் வன்முறை நடப்பதற்கோ, பிரச்சாரம் நடப்பதற்கோ தி.மு.க. நிச்சயம் அனுமதி தராது என்றும்அவர் திட்டவட்டமாக கூறினார்.

சட்டசபையில் வெள்ளிக்கிழமை அன்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியபோது குறுக்கிட்டு முதல்வர் இதை தெரிவித்தார். இப்பிரச்னைதொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதம் வருமாறு:

ஜி.கே. மணி (பா.ம,.க.):

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதை கூட சிலர் கொச்சைப்படுத்துகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்காக நாம் பேசுவதில் எந்த தவறும் இல்லை. உலகளாவிய தமிழர்கள் அனைவரும் இந்தஉணர்வுடன் உள்ளனர். இங்கே இருக்கும் தமிழர்களுக்கு அந்த உணர்வு இல்லை.

செல்வகுமார் (த.மா.க.):

விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம் என்று நீங்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசே கூறி விட்டது. அப்படிஇருக்கும் போது தடை செய்யப்பட்ட இயக்கத்திறகு நீங்கள் துணை போகலாமா?

ஜி.பழனிச்சாமி (இந்திய கம்யூ):

தமிழ் ஈழத்தை மத்திய அரசு ஆதரிக்காது என்று பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால்,பா.ம.க.வோ தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறது. எனவே, மத்திய அரசில் இருந்து வெளியேறுவீர்களா?

ஜி.கே.மணி (பா.ம.க):

தமிழ் ஈழம் என்பது எங்கள் கொள்கை. அதை நாங்கள் மாற்றிக் கொள்ள மாட்டோம். அது எங்கள் கட்சியின்கொள்கை.

ஜி. பழனிச்சாமி:

இலங்கை ப் பிரச்னை குறித்து தமிழக முதல்வரை அழைத்துப் பிரதமர் பேசினார். அப்போது இலங்கைக்குராணுவத்தை அனுப்பக் கூடாது என்று முதல்வர் ஆலோசனை சொல்லி விட்டு வந்தார். பா.ம.க. பிரதமரின் இந்தமுடிவை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா? புலிகள் விஷயத்தில் பா.ம.க. வின் நிலை குழப்பமாக உள்ளது.தமிழக அரசும் தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

செல்வகுமார்:

புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம்.அதை பற்றி வெளியில் கூட பேசக் கூடாது. அப்படியிருக்கும்போது சட்டமன்றத்தில் பேசலாமா?

தீரன் (தமிழ் பா.ம.க.):

காஷ்மீர் தீவிரவாத இயக்கம் கூட தடை செய்யப்பட்டதுதான். அந்த தீவிரவாதிகள் பற்றி நாடாளுமன்றத்தில்அத்வானி பேசவில்லையா? எனவே சட்டமன்றத்திலும் புலிகள் பற்றி பேசலாம்.

முதல்வர் கருணாநிதி:

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமா அல்லது விடுதலைப் புலிகள் மீதான விவாதமா என்று இடம்தெரியாத அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறோம். புலிகள் விஷயத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்றுபழனச்சாமி கேட்டார்.

போராட்டத்தின் மூலமோ அல்லது பேச்சு வார்த்தை மூலமோ புலிகள் தனி ஈழம் பெற்றால் மகிழ்ச்சி அடைவேன்.அதற்காக தமிழ் நாட்டில் வன்முறை நடப்பதற்கோ அல்லது பிரச்சாரம் நடப்பதற்கோ தி.மு.க. அரசு நிச்சயம்அனுமதி தராது.

புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். அதை மீண்டும் நடமாட அனுமதிக்க மாட்டோம்.

இது தொடர்பாக பிரதமரிடன் கலந்து பேசிய போது, இந்திய ராணுவத்தை அனுப்புவதற்கு எந்த கட்சிக்கும்உடன்பாடு இல்லை என்ற கருத்தை தான் அவரிடம் சொன்னேன்.

இதை மீறி மனிதாபிமான உதவிகள் செய்யலாம் என்பது மத்திய அரசு எடுத்த முடிவு என்றார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+