தமிழகத்தில் இன்று
டாக்கா:
பங்களாதேசத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல் சாட்டப்படும் குற்றங்கள் குறித்து போலீஸ் இலாகாவினரும், அரசியல் கட்சிகளும் விளக்கம்அளிக்க வேண்டும். அவர்களை வன்முறைக்குத் தூண்டுவது யார் என்பது குறித்தும் அவர்கள் கூற வேண்டும் என்று டாக்கா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
இது குறித்து அமைக்கப்பட்டுள்ள டிவிஷன் பென்சில் நீதிபதி முகமது கோலம் ரபானி, முகமது முகமது லட்டிபூர் ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டாக்காவில் பல்கலைக்கழக ஆசிரியர் பிரொகானுதீன் கான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்குலைக்காதவாறு மாணவர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகளிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளலாம். அதுவன்முறையாக வெடிக்கும் பட்சத்தில் வேண்டுமானால் அதில் தொடர்புடைய மாணவர்களைக் கைது செய்யலாம்.
அதற்காக அதில் தொடர்பில்லாத மாணவர்களை கைது செய்து அவர்கள் மேல் பொய் வழக்குப் போட அரசு முயற்சிக்கக் கூடாது என்றுபல்கலைக்கழக ஆசிரியர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வக்கீல் ஒருவர் கூறுகையில், மாணவர்களை அரசியலுக்கு இழுக்கும் நோக்கத்துடன் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. தற்போதுமாணவர்கள் பல்கலைக் கழகங்களை முற்றுகையிடுதல், கடத்தல், கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கு அரசியல்கட்சிகளே காரணம். இது முறியடிக்கப்பட வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலுக்கு இழுக்கமுயற்சிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
பங்களாதேஷ் அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி சகாபுதீன் அகமது கூறுகையில், மாணவர்கள் அரசியல் கட்சிகள் வலுக்கட்டாயமாய் அரசியல்கட்சிக்கு இழுப்பதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்களது படிப்பும் பாதிக்கப்பட்டு விடுகிறது. இதனால் அவர்களைஅழிவுப்பாதையிலிருந்து மீட்டுக்கொண்டு வர வேண்டும். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்று அவர்பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
தன்னார்வ அமைப்பு ஒன்று பங்களாதேஷில் அண்மையில் நடத்திய சர்வே ஒன்றில் 40 சதவீத மாணவர்கள் போதைப் பொருட்களுக்குஅடிமைப்பட்டுள்ளார்கள் என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் அண்மையில் ஜஹாங்கிர் பல்கலைக்கழக வளாகத்தில் 20 கல்லூரி மாணவிகள் மாணவர்களால் கற்பழிக்கப்பட்டனர். பங்களாதேஷில்வன்முறை தலைவிரித்தாடுவதையே இது காட்டுகிறது. இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அதிபர் அனைத்துப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களையும்அழைத்து இந்த வன்முறைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பங்களாதேச நாட்டின் முக்கிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications