தமிழகத்தில் இன்று
சென்னை:
ஜெயா "டிவிக்கு ரூ.50 லட்சம் கட்சிப் பணம் கொடுக்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் கொடுத்த கட்சிப் பணத்தை மன்னார்குடி குடும்பம் உறிஞ்சுகிறது என்றுஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
லட்சக் கணக்கான தொண்டர்கள் தந்த நிதியாலும், பல முன்னாள் அமைச்சர்கள் வசூலித்துக் கொடுத்த பணத்தாலும் வாங்கிய, கட்சித் சொத்தான சபையர்தியேட்டர் வளாகத்தை மிக ரகசியமாக விற்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேட்டிருந்தோம்.
பல கோடி பெறுமான தொண்டர்களின் சொத்தை நியமன செயற்குழுத் தீர்மானம் மூலம் விற்க முடியுமா என்ற சட்டப் பிரச்னை வெகுவிரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் எனது வழக்கில் எழுப்பப்படும்.
இதற்கிடையில் காளித்து பெயரில் ஒரு அறிக்கை வந்துள்து. அவராகவே வெளியிட்ட அறிக்கையா என்பது கூட விசாரணைக்கு உரிய செய்தி. கட்சிச் சொத்தின்மூலம் ஜெயா டிவி இயங்க வேண்டிய நிலை என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயா டிவி ஆரம்பமாவதற்கு முன்னரே 1999 ஆகஸ்ட் மாதத்திலேயே கட்சிப் பணம் 50 லட்ச ரூபாய் சுளையாக ஜெயா டிவிக்கு கொடுக்கப்பட்டது.
கட்சித் தொண்டன் கொடுத்த பணத்தை எப்படியெல்லாம் மன்னார்குடி குடும்பம் உறிஞ்சுகிறது என்பதற்கு இப்படி பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.தற்போது இது ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
இந்த 50 லட்சத்திற்கு செயற்குழு ஒப்புதல் ஏன் பெறவில்லை? மூடி மறைக்கும் முயற்சியா? என்பதை தொண்டர்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன் என்றுகூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications