தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
கசப்பான வழக்கில் இந்தியாவுக்கு வெற்றி

வாரணாசி:

வேப்பிலைக்கான காப்புரிமை (பேடண்ட்) வழக்கில் இந்தியா வென்றது.

வேப்பிலையின் மருத்துவப் பயன்களை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று கூறிக் கொண்டு பல அமெரிக்கநிறுவனங்கள் அதற்கு பேடண்ட் வாங்கி வைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவேப்பிலை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து அமெரிக்க பேடண்ட்களை எதிர்த்து இந்தியா வழக்குத் தொடர்ந்தது. இந்த "கசப்பான" வழக்கில்இந்தியாவுக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது.

ஐரோப்பாவின் பேடண்ட் அலுவலகத்தில் இதற்கான வழக்கு நடந்தது. வேப்பிலைக்கான காப்புரிமையைஅமெரிக்க பேடண்ட் அலுவலகம் டபிள்யூ.ஆர். கிரேசுக்கு வழங்கியது. இதை எதிர்த்து இந்தியா வழக்குதொடர்ந்தது. இதனை விசாரித்த ஐரோப்பிய பேடண்ட் அலுவலகம் அமெரிக்காவின் உத்தரவை ரத்து செய்தது.

கடந்த 4 வருடங்களாக இந்திய விஞ்ஞானிகள் இந்த உரிமைக்காக பேடண்ட் அலுவலகத்தில் வாதாடி வந்தனர்.இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி மையம் (ஆர்.எப்.எஸ்.டி.ஈ.) தான் இந்தவழக்கை கையாண்டு வந்தது. இந்தியாவின் சார்பில் பனாரஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவசாயத்துறைஆராய்ச்சியாளர் பேராசிரியர் யு.பி. சிங் ஆஜராகி வந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வேப்பிலையை இந்தியர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். திடீரெனஒரு நிறுவனம் வேப்பிலையின் மருத்துவப் பயன்களை தாங்களே கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்வதை ஏற்கமுடியாது என சிங் வாதிடார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம்அமெரிக்காவின் பேடடண்ட் அலுவலக உத்தரவை ரத்து செய்தது.

இந்தத் தீரப்பு குறித்து ஆர்.எப்.எஸ்.டி.ஈயின் இயக்குனர் வந்தனா சிவா கூறுகையில், வேப்பிலை மீதானபேடடண்ட் வழக்கில் இந்தியாவின் நிலையை ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம் அங்கீகரித்துள்ளது. இதுஅமெரிக்காவின் வரலாற்றுத் தவறுகளுக்கு நல்ல பாடமாகும். வேப்பிலை மீது பல அமெரிக்க நிறுவனங்கள்பேடடண்ட் வாங்கி வைத்துள்ளன.

அமெரிக்காவின் பேடண்ட் சட்டங்கள் இந்திய மூலிகைகளைத் திருட பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தடுக்க இந்திய அரசும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+