தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான காலியிடங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையைதமிழக அரசு வியாழக் கிழமை வெளியிட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 4907, பழங்குடியினருக்கானபணியிடங்கள் (எஸ்.டி.) 1094 ஆகியவை காலியிடங்களாக உள்ளன.
அரசு பணியிடங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்ஆகியோருக்கான இட ஒதுக்கீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
1.4.1989 முதல் இதுவரையில் இட ஒதுக்கீடுப்படி இவர்களுக்குரிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஏற்பட்ட பின்னடைவுதொடர்காக ஏற்பட்ட காலியிடங்கள் பற்றி புள்ளி விவரங்கள் அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளன.
அரசுப் பணிகளில் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளில் இதுவரை ஆதிதிராவிடர்களுக்கான பணியிடங்கள் 4907ம்,பழங்குடியினருக்கான இடங்கள் 1094ம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான இடங்கள் 5263ம் காலியாகஉள்ளன.
இந்த பின்னடைவு சரி செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு ழுமையாக அமல்படுத்தப்படும் வகையில் காலி பணியிடங்களை மீண்டும்அவர்களுக்கே ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் மொத்தம் 105 துறைகள் உள்ளன. அதில் 96 துறைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மீதி 9 துறைகள்விரைவில் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும். 96 துறைகளில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 51 ஆயிரத்து 559.இதில் ஆதிதிராவிடர்கள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 398. பழங்குடியினர் 6697. பிற்படுத்தப்ட்டோர் 3 லட்சத்து 61 ஆயிரத்து 145.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 556.
பொதுத் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள், மாநிகராட்சிகளில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து755. அதில் ஆதிதிராவிடர் 71 ஆயிரத்து 368. பழங்குடியினர் 2566. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 47 ஆயிரத்து498.பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 697 பேர் என்று அரசு தெவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications