தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இனி பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

கேள்வி: 1985-ம் வருடத்தில் இருந்து, இலங்கை பிரச்னை மிகத் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. திடீர் திடீரென்று பிரச்னை பெரிதாவதும், சமாதானமுயற்சி, ஆதரவுக்குரல் என்று இங்கிருந்தும் கிளம்புகிறது. இன்றுவரை பிரச்னை ஒரு முடிவுக்கு வராதரதற்கு என்ன காரணம்?

பதில்: முதல் காரணம் சிங்கள அரசின் இன வெறி. இரண்டாவது இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசுக்கு அங்கே எந்த அதிகாரமும்இல்லை.
அங்குள்ள புத்தமத தலைவர்களின் அமைப்புகளிட ம் தான் அதிகாரம் இருக்கிறது.
அவர்கள் நினைப்பதுதான் அங்கே நடக்கிறதே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நினைப்பது ஏதும் நடப்பதில்லை. பிரச்னை தொடர இதுதான்முக்கியமான காரணம்.

கே: இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்று எதைச்சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: என் பார்வையில் இலங்கையில் சிங்களர்களும். தமிழர்களும் சேர்ந்து வாழ முடியாது.
இந்த விஷயத்தை அங்குள்ள தமிழர்களைவிட சிங்களர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
சிங்களர்கள் தமிழர்களோடு சேர்ந்து வாழத் தயாராக இல்லை.
ஆகையினால் அரசியல் ரீதியான தீர்வு தான் இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி.

ஈழத் தமிழர்களுக்கு உரிய, அவர்களுடைய மண்ணை அவர்களிடம் விட்டுக் கொடுத்துவிட்டு. தென் இலங்கையில் வாழ்கின்ற சிஙகள மக்களுடைய சமூக,கல்வி, பொருளாதாரம், தொழில் மேம்பாட்டிற்கு சிங்கள அரசு பாடுபட ஆரம்பிக்க வேண்டும்
இதுவரை அந்த நாட்டின் வருமானத்தில் எழுபத்தைந்து சதவீதம், விடுதலைப் புலிகளுடன் போர் நடத்தவும், ஆயுதங்கள் வாங்கவும், இந்த பிரச்னைக்காகவெளிநாடுகளில் ஆதரவு திரட்டுவதற்குமே செலவழிக்கப்படுகிறது.

சிங்கள அரசு, சிங்கள மக்களின் வளர்சியையும் கவனிக்கவில்லை.
அந்த மக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு உணவே இல்லை.
அவர்களது இருப்பிடங்களில் மின்சாரம், பெட்ரோல், மருத்துவ வசதி, கல்வி, விவசாயம், தொழில் என்று எதுவுமே இல்லை.

மீன்பிடி தொழில் நடத்துவது கூட கடந்த இருபது ஆண்டுகளாக அங்கே கடினம்.
தமிழர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழித்து வருகின்ற சிங்கள போர்வாத அரசு, தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள இனத்தவரையும் கூடவே அழித்துவருகிறார்கள் என்பதை உணராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு தமிழ் மண்ணை விட்டுக் கொடுத்து, இதுவரை சிங்களர்களின் வாழ்கையில், மேம்பாட்டில் கவனம் செலுத்தாத அரசு கவனம் செலுத்தவேண்டும்.
தனி ஈழம்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு.

கே: ""தனி ஈழம் என்பது சாத்தியமான விஷயம் தானா? இந்தியப்பிரதமர் வாஜ்பாய் - தனி ஈழத்தை இந்தியா அங்கீகரிக்க முடியாதுஎன்றிருக்கிறாரே?

ப: "" உலகில் சாத்தியமில்லாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?
எல்லாமே சாத்தியம் தான்.
கிருஸ்து பிற்ப்பிற்கு முன் பட்ட காலத்திலிருந்தே பலர் இலங்கையை ஆண்டு வந்திருக்கிறார்கள். போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் கடைசியாகஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.

அப்பொழுது அங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தது யார் தெரியுமா? பாயும் புலி பண்டார வன்னியர்- தமிழர் தானே. பண்டார வன்னியருக்குஇலங்கையில் சிலை இருக்கிறது.
இது வரலாறு. இது மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டே இலங்கை என்பது தமிழர்களுடைய நாடுதான்.
அங்கே தமிழ் தான் பிரதான மொழியாகவும் இருந்தது.
இந்த நேரத்தில் அங்கே வாழ்ந்தவர்கள் இரண்டு மதத்தினர். இந்து மதம் (தமிழர்கள்), சிங்கள மதத்தினர் (சிங்களர்கள்) தான்.

அங்கேயுள்ள மொழி, பண்பாடு, நாகரீகம் எல்லாமே திராவிட பாரம்பரியம்தான். விஷயம் ஒன்றுமில்லை. இன்று எல்லைப் பிரச்னை என்று இந்தியாபாகிஸ்தான் அடித்துக் கொள்வது மாதிரித்தான் அங்கேயும், வெள்ளைக்காரன் இலங்கையை விட்டுச் செல்லும் போது சிங்களிர்களிடம் நாட்டை கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
நாட்டை சரியாக அன்றே பிரித்துக் கொடுத்திருந்தால் இன்று குழப்பமே இருந்திருக்காது.
உலகில் எதுவுமே சாத்தியமானதுதான், கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் உதிப்பது தவிர.!

கே: ""இந்தப் பிரச்னையில் மத்திய அரசின் தற்பொழுதைய அணுகுமுறை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: ராணுவம் அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தது நல்ல முடிவு.
பாராட்டுகிகுரியது. பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக அக்கறை கொண்டு பல்வேறு பல்வேறு நாடுகளிடம் பேசுவதும்மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.
இந்திரா காந்தி ராஜீவ் காந்தியைவிட மாறுபட்ட நிலைப்பாட்டை வாஜ்பாய் எடுத்திருக்கிறார். பாராட்டக் கூடிய அம்சங்கள்தான்.
கே: ""இந்திய அரசு உதவவில்லை என்றால், பாகிஸ்தான் இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ சென்றால் அதனால் இந்திய நாட்டின்பாதுகாப்புக்கும் தானே ஆபத்து?

ப:""ஏற்கனவே, சீனா, இஸ்ரேல் , அமெரிக்கா போன்ற நாடுகள் மறைமுகமாக உதவிதான் வருகிறது.
இந்தியாவுக்கும், இலங்க்ைகும் உள்ள உறவு என்பது சாதாரணமானதல்ல.
தூரம் என்பது ஜெயின் கமிஷன் விசாரணையின் போது ஜெயின் சொன்னது மாதிரி புதுடெல்லிக்கும், பழைய டெல்லிக்கும் உள்ள தூரம்தான்.

மொழி, பண்பாடு,கலாச்சாரம் ஏன் ரத்த சம்பந்தமுடைய நாடுகள் இந்தியாவும் இலங்கையும்.
இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கையில் உண்டு.
இந்து மகாக் கடலில் நுழைந்து இப்பிரச்னையில் தலையிட இந்தியாவைத்தவிர வேறு எந்த நாடுகளையும் நாம் அனுமதிக்கக் கூடாது.
இதைத்தான் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறேன்.

கே: இதற்கு முன்பு நீங்கள் இலங்கைப் பிரச்னைக்காக குரல் கொடுத்த பொழுது எதிர் கட்சியில், அல்லது தனியொருவராக குரல் கொடுத்தீர்கள்.இப்பொழுது மத்திய, மாநில அரசில் அங்கம் வகித்து வருகிறீர்கள். பிரச்னைக்கான முடிவை, நீங்களே எடுக்கின்ற நிலையில் தானே இருக்கிறீர்கள்?

ப: இது ஏதோ, தமிழ்நாடு அல்லது இந்தியாவில் உள்ள பிரச்னை என்றால், நீங்கள் சொல்வது போல் செயல்படலாம்.
இந்த பிரச்னை இன்னொரு நாடு சம்பந்தப்பட்டது.

எனவே, எங்கள் கட்சி சார்பில் எந்தெந்த வகையில் எல்லாம் போராட முடியுமோ அப்படியெல்லாம் போராடுகிறோம்.
அதை வெளிப்படையாக சொல்லமுடியாது.

கே:""விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்துவீர்களா?

ப: மத்திய அரசு, இலங்கை அரசு, புலிகள் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லும் பொழுதே,புலிகள் மீதான தடை நீங்கியதாகி விடும்.
இரண்டாவது விடுதலைப் புலிகளின் நடவடிக்கை இங்கே இல்லை. எந்த வன்முறையையும் அவர்கள் செய்ததில்லை.

ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை என்று சென்று கொண்டிருப்பது வேறு. சொல்லப்போனால் ராஜீவ் படுகொலை நடந்தவுடனேயே,அதற்கு கண்டனம்தெரிவித்தேன்.
இந்த நேரத்தில், ராஜீவ் காந்தி படுகொலையையும், இப்பொழுதுள்ள நிலையையும் சேர்த்து பார்க்கக்கூடாது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரச்னை இது.
விடுதலைப் புலிகள் இந்தியாவில் தமிழக்த்தில் இயற்கையாகவே வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்.

கே: ""விடுதலைப்புலிகளின் தரப்பில் உள்ள நியாயங்கள் பற்றிச் சொல்லுங்களேன்?

ப: தமிழர்கள் மானத்தோடு உரிமைகள் பெற்று வாழ வேண்டும் என்று விடுதலை உணர்வோடு போராடுகிற இயக்கம். liberationmovementவிடுதலை உணர்வோடு போரடுகின்ற எல்லா இயக்கங்களுக்கும் இந்தியா ஆதரவு கொடுத்துள்ளது.

குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுடைய விடுதலை இயக்கத்தில் மிகவும் ஆர்வம் காட்டியிருக்கிறது

கே: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதால் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் உங்களைகடுமையாக விமர்சனம் செய்கிறதே அது குறித்து தங்கள் கருத்து என்ன?

ப: ஈழத் தமிழர்களின் மீது ஐம்பது ஆண்டுகால போராட்ட வரலாறு புரியவில்லை.
ஈழத்தமிழர்கள் யார் என்பது பற்றிய வரலாறும், இந்த 50 ஆண்டு கால போராட்டத்தின் வரலாறும் தெரிந்திருந்தால்என்னை விட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து நிற்பார்கள்.
இந்த வரலாறு தெரிந்தும், எதிர்ப்பவர்கள், சிங்களர்களின் கைப்பாவையாக - அவர்களுக்காக வக்காலத்துவாங்கிக்கொண்டு இருக்கின்றவர்களை தமிழ் துரோகிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு விஷயம் புலிகளை எந்தக் காலத்திலும் சிங்களர்களால் வெல்ல முடியாது. அதைத்தான் இப்பொழுதுபுலிகள் நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ் போராளிகளுக்கு பயந்து, 25,000 சிங்கள ராணுவத்தினர் கடந்த பத்து ஆண்டு காலத்தில் ராணுவத்தைவிட்டே ஓடி ஒளிந்து உலக சரித்திரம்.
இலங்கை பிரச்னைக்காக பல முறை ஒப்பந்தங்கள், சமாதனக் கூட்டம் என்று நடந்திருக்கிறது. பண்டாரசெல்வநாயகா எங்கே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி விடுவாரோ என்று ஒரு புத்த பிட்சு பண்டார நாயகாவை கொலைசெய்துவிட்டார்.

இது நடந்தது 1950-களில்.
அதன் பிறகும் பல தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் 1987-ல் ராஜீவ் காந்தி, ஜெயலலிதா இருவரும் ஒரு ஒப்பந்தம்போட்டனர்.
அப்போது நடந்தது என்ன? அந்த ஒப்பந்தத்திற்கு பிறகு புத்த பிட்சுகள் தீக்குளிப்போம் என்றார்கள்.
சிங்கள அரசுக்கு எதிராக , ஐந்து போராளிகள் குழுக்களை இந்தியாவுக்கு வரவழைத்து பயிற்சி, ஆயுதம் எல்லாம்கொடுத்து இந்திரா காந்தி தயார் செய்தார்.
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் அன்றே பிரச்னை தீர்ந்திருக்கும்
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

--------------------------------------------------------

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+