தமிழகத்தில் இன்று
(நமது நிருபர்)
சென்னை:
நள்ளிரவில் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதற்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுசட்டசபையில் அதிமுக உறுப்பினர் சுந்தரம் கூறினார்.
சட்டசபையில் செவ்வாயன்று நடைபெற்ற விவாதத்தின்போது சுந்தரம் பேசினார். அப்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுகத்தின் மீது சேலத்தில் நிலஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டினார். அப்போது அமைச்சருக்கும், சுந்தரத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஆவேசமாகபேசிக் கொண்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று சட்டசபையில் சுந்தரம் எழுந்து திடீரென்று ஒரு பிரச்னையை எழுப்பினார். இதுபற்றி அவர் பேசுகையில், ""புதன்நள்ளரவில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் என்னை மிரட்டினார். ""எங்கள்மாவட்டத்து அமைச்சரை எதிர்த்துப் பேசி விட்டு நீ ராசிபுரம் போய் விட முடியுமா? சேலம் வழியாக தான் நீ ராசிபுரம் போயாக வேண்டும். அப்போதுஉன்னை பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்.
நான் நீ யார் என்று கேட்டதும் போனை கட் செய்து விட்டார். மறுபடியும் 15 நமிடம் கழித்து அதே மனிதன் தொலைபேசியில் மிரடினார். இப்படி மூன்று முறைமிரட்டலுக்கு ஆளானேன்.
இதுபற்றி இன்று காலையில் போலீசில் புகார் செய்துள்ளேன். என் உயிர் போனாலும் கவலை இல்லை. ஆனால், நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்,எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
உடனே சபாநாயகர் பழனிவேல்ராஜன், ""உங்களுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். அதற்கான உத்தரவு போலீசுக்கு பிறப்பிக்கப்படும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications