தமிழகத்தில் இன்று
அகமதாபாத்:
இத்தாலியின் அலிடாலியா விமானத்தில் வந்த இந்தியப் பயணியின் உடமைகளை தொலைந்து போனதையடுத்து பயணிக்கு 75,000 ஆயிரம் ரூபாய் அபராதம்கொடுக்க வேண்டும் என விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
இது குறித்துக் கூறப்படுவதாவது:
மும்பையைச் சேர்ந்தவர் பிரதிபா சேத். இவரும் இவரது மகளும் கடந்த 1992 ம் ஆண்டு இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கிருந்து மும்பைதிரும்பும் போது இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தார். ஆனால் அவர் மும்பை வந்து இறங்கியபோது அவரது உடைமைகள் வந்து சேரவில்லை.அவை இத்தாலியிலேயே சிக்கி விட்டன. விமான நிறுவனத்தின் தவறால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.
அந்த விமானம் சிகாகோவிலிருந்து மும்பை வரும் போது இந்தத் தவறுதல் நடந்தது. அவருக்கு இதுதொடர்பாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம்நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இதுகுறித்துப் பிரதிபா கூறுகையில், நான் என்னுடைய மூன்று பெரிய சூட்கேஸ்களையும், ஒரு தோல் பையையும் வைத்திருந்தேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.தோல்பையில் நான் வைத்திருந்த பொருட்கள் எதுவுமே இல்லாமல் கிழிந்த நிலையில் திரும்பக் கடந்த வருடம் கிடைத்தது. சூட்கேஸ்கள் மூன்றும்கிடைக்கவேயில்லை என்றார்.
நுகர்வோர் கோர்ட்டில் பிரதிபா ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பொருட்கள் இருந்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட்எட்டு வருடங்களாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம் இதற்கு நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை.
அதனால் பயணி பிரதிபாவின் ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பிரதிபாவின் உடைமைகளுக்கான நஷ்டஈடாக ரூ 75 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றுதீர்ப்புக் கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications