தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
யாழ்பாணத்தில் பெரும் தோல்வியை நோக்கி ராணுவம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூட்டியுள்ளார். திங்கள்கிழமை இந்தக் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே இலங்கை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தப்பிரச்சனையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கேட்டுக் கொண்டால் நாங்கள் சமாதானம் செய்து வைக்கதயாராக உள்ளோம்.
இவ் விஷயத்தில் இந்தியாவின் நிலையே தான் எங்கள் நிலையும். இந்தியா, இலங்கை, நார்வே, பிரிட்டன்அரசுகளுடன் இந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். முதலில் போர் குறித்த செய்திகளுக்குஇலங்கை அரசு விதித்துள்ள தடையை விலக்க வேண்டும் என்றார். முன்னதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாஆகிய நாடுகளும் மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயார் என அறிவித்துள்ளன.
இதற்கிடையே யாழ்பாண நிலை குறித்து இலங்கையில் உள்ள 30 வெளிநாட்டு தூதர்களிடம் இலங்கைவெளியுறவுத்துறை துணை அமைச்சர் லட்சுமண் கிரில்லா விளக்கினார்.
இலங்கையில் அமைக்கப்படவுள்ள தனி மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுப்பதில்லை என ஆளும்மக்கள் கூட்டணியும் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் முடிவெடுத்துள்ளன.
இதன் மூலம் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளுக்கு பெரும் அடி விழுந்துள்ளது.அதிக அதிகாரங்களுடன் கூடிய தனி மாகாணங்களை உருவாக்குவது என முதலில் இலங்கை அரசு திட்டமிட்டது.
இதன் மூலம் தமிழர் அதிகம் உள்ள மாகாணம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு அதிக தரப்படலாம் என்றுகருதப்பட்டது.
இந்த அடிப்படையில் தான் அமைதிப் பேச்சுவார்தைக்கு புலிகளை அழைத்து வர பல்வேறு தரப்பிலும் முயற்சிகள்நடந்து வருகின்றன. ஆனால், தனி மாகாணங்களுக்கு அதிகாரம் அதிகம் தரப்பட மாட்டாது என்று ஆளும்கட்சியும் முக்கிய எதிர்க் கட்சியும் முடிவு செய்துள்ளன.
இது அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தெரிகிறது.மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது பெரும்பான்மையான வசிக்கும் சிங்கள இனத்தவரிடையேதங்களுக்கு உள்ள ஆதரவைக் குறைத்துவிடும் என்பதால் இரு கட்சிகளும் இந்த முடிவெடுத்துள்ளன.
இந்தப் பிரச்சனை குறித்து முதலில் முக்கிய எதிர்க் கட்சியுடன் பேசிவிட்டு பின்னர் தமிழ் கட்சிகளுடன் பேசப்படும்என்று முதலில் சந்திரகா அறிவித்திருந்தார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளுடனும் பேசுவேன் என்றுகூறியிருந்தார். ஆனால், இப்போது புலிகளுடன் கடும் போர் நடந்து வருவதால் பேச்சுவார்த்தை நடக்குமா என்பதுசந்தேகமே.
யாழ்பாணத்தில் தோற்றுக் கொண்டிருக்கும் அரசு பேச்சு நடத்தாது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications