தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை ராணுவத்துக்கு இஸ்ரேலும் பாகிஸ்தானும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ஆனால், தமிழர்களை வெல்ல எந்த படையாலும் முடியாது என்றார். இது குறித்து ராம்தாஸ் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் நடந்து வரும் போர் உச்ச கட்ட நிலையை அடைந்து தமிழ் வீரர்கள் யாழ்பாணத்தை நெருங்கிவருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தையும், தளவாடங்களையும் இலங்கைக்குஅனுப்புமாறு இந்தியாவிடம்கேட்டது.
ஆனால், ராணுவத்தை அனுப்புவது இல்லை என்றும் அமைதி வழியில் பிரச்னை தீர தேவையான உதவிகளைசெய்வது எனறும், இந்துமாக் கடலில் அந்நிய நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்வது என்றும்மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய அரசின் இந்த துணிச்சலான முடிவுகளை வரவேற்பதோடு அவைகளை நான் பாராட்டுகிறேன். அதே போலசீனாவின் நிலையும் பாராட்டத்தக்கது.
ஆனால், இந்தியா எடுத்துள்ள முடுவுகளுக்கு மாறாக பாகிஸ்தானும், இஸ்ரேலும் இலங்கைக்கு ஆயுத உதவிசெய்துள்ளன. இஸ்ரேல் படை விமானங்களையும், கணிசமான ஆயுதங்களையும் இலங்கையில் இறக்கி உள்ளது.
பாகிஸ்தான் ஒரு கப்பல் நிறைய ராக்கெட்டுகளையும் அவற்றை ஏவும் கருவிகளையும் அனுப்பி வைத்துள்ளது.பாகிஸ்தானும், இஸ்ரேலும் செய்துள்ள ஆயுத உதவி இந்திய நலனுக்கும், தமிழர் பாதுகாப்புக்கும் எதிரானது.
மனித உரிமைக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை உலகில் உள்ள தமிழ் உணர்வுகொண்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த இரு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டுமூக்கறுபடப்போவது நிச்சயம்.
பாகிஸ்தான் கார்கிலில் பட்ட அவமானம் போதாது என்று இலங்கையிலும் அவமானப்பபடப் போகிறது. தன்சொந்த நாட்டிலேயே அரசியல் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் பாகிஸ்தான்,இலங்கையின் எதேச்சதிகாரத்திற்கு துணை போகத் துடிக்கிறது.
எந்த ஆயுதத்தையும் தாங்கும் மன உறுதி இலங்கைத தமிழர்களிடம் உள்ளதை பச்சோந்தி பாகிஸ்தான்உணரவில்லை. இலங்கை தமிழ் வீரர்கள் பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள்.
தமிழனை வெல்ல எந்த படையாலும் முடியாதுஎன்பதை தமிழ் மறவர்கள் நிரூபிக்கத்தான் போகிறார்கள். எந்தஉயிர்த் தியாகம் செய்தாவது தமிழர்கள் கொள்கையையும் . சுய உரிமையையும் இலங்கையில் நிலை நாட்டப்போவது உறுதி என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications