ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பயிற்சியாளராக கபில் தேவ் தொடருவார்- லேலே
துபாய்:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம் மாதம் இறுதியில் துவங்க உள்ள ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின்பயிற்சியாளராக கபில்தேவ் தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியச் செயலர் ஜெ.ஒய். லேலே தெரிவித்தார்.
இது தொடர்பாக கப்ஃப் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறு.வாரியத்தைப் பொறுத்தவரை, இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்தான். மே15-ம் தேதி புனேயில் துவங்கும் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்வார்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால்,இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாஎன்பது எனக்குத் தெரியாது. புனேயில் நடைபெற உள்ள 10 நாள் பயிற்சி முகாமில்வீரர்கள் அனைவரையும் நான் சந்தித்துப் பேசுவேன். அவர்களுடன் லஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிப்பேன்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த கூட்டம் மே 19-ம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது என்றார் லேலே.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications