செயலை விட அதன் பயனை நேசித்தால்!
டெல்லி:
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் வரலாற்றிலேயேமுதல் முறையாக இப்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு வரை மத்திய அரசின் இணைச் செயலாளர்களே இப்பதவியில்அமர்த்தப்பட்டு வந்தனர். இப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில்பைஜால், பதவிக்காலம் ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகுஅவர் உள்துறை அமைச்சகத்தில் பணிக்குச் சேரவுள்ளார்.
இதுதொடர்பான விண்ணப்பங்களைக் கோரி பொதுத் துறை ஊழியர்கள் தேர்வுவாரியம் அழைப்பு விடுத்தது.
இதற்கிடையே, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் பதவிக்குசெவ்வாய்க்கிழமை நேர்முகத் தேர்வு நடக்கிறது. இப்பதவியில் தற்போது இருந்துவரும் என்.சி.கோஸ் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications