தமிழகத்தில் இன்று
டெல்லி:
சியாமளா கெளசிக்... இவர் இருக்கும் இடமெல்லாம் இந்திய அழகிகளுக்கு வெற்றி தேடித் தருகிறார். இப்போது சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத்தூதராக இருக்கிறார் கெளசிக்.
பிலிப்பின்ஸில் 1994-ல் இவர் இந்தியத் தூதராக இருந்தபோதுதான் சுஷ்மிதா சென் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் உலகஅழகியாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லாரா தத்தா மிஸ்.யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், சியாமளாதான் சைப்ரஸ் நாட்டின் இந்தியத் தூதராக இருந்தார்.
22 வயதாகும் லாரா தத்தா, 49-வது மிஸ்.யுனிவர்ஸாக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 78 பேர் இதில் கலந்து கொண்டனர்.
நிகோஷியாவில் நடந்த மிஸ்.யுனிவர்ஸ் போட்டியின்போது, சியாமளாவும் அங்கு இருந்தார். லாரா தத்தாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்குமுன்பு பிலிப்பின்ஸில் சுஷ்மிதா சென் தேர்வுசெய்யப்பட்டபோது, தான் அடைந்த அதே மகிழ்ச்சியை இப்போதும் அடைந்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
நிகோஷியாவிலிருந்து இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், இந்திய அழகிகளின் அதிர்ஷ்ட முகம் நான்.நிகோஷியாவில் நடந்த இறுதிப் போட்டியின்போது அரங்கினில் 250 இந்தியர்கள் கூடியிருந்தனர். லாரா தேர்வு பெற்றவுடன் அனைவரும் ஆனந்தத்தில்பங்கரா டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டனர்.
துவக்கம் முதலே லாரா தத்தாவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வந்தது. முதல் மூன்று இடங்களுக்குள் அவர் எளிதாக வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. தனது அழகு, புத்திசாலித்தனமான பேச்சு, கேள்விகளுக்கு சாதுர்யமாக அளித்த பதில்கள் என அனைவரையும் அவர் எளிதில்கவர்ந்தார்.
போட்டியின்போது தனது பெற்றோர்களை, ஹோட்டலுக்குச் செல்லுமாறு அவர் கூறி விட்டார். அவர்கள் அங்கு இருந்தால் தன்னால் சரியாக செய்யமுடியாது என்பதால் அப்படிச் செய்தார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications