For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அமெரிக்காவில் துப்பாக்கியைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு: கிளின்டன் பேச்சு

வாஷிங்டன்:

துப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப்படவேண்டும்என்று அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னையர் தினஊர்வலங்களில் கலந்து கொண்ட பெண்கள் கேட்டுக் கொண்டனர்.

உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும்ஆயிரக்கணக்கான பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கின்றனர். அமெரிக்காவில்துப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாட்டுகளோ, சட்டதிட்டங்களோஏதும் இல்லை. சிறு தகராறு என்றாலும், துப்பாக்கியால் சுடப்பட்டு பலர் இறக்கின்றனர்.மேலும், விளையாட்டாக சிறுவர்களும் துப்பாக்கியைப் பயன்படுத்துவதால் விபத்துஏற்பட்டு அதனாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுமார் 30 பேர் இறந்தனர். இதில் 4000 பேர், 19 வயதுமற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், அன்னையர் தினத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் சுமார் 65நகரங்களில் பெண்கள் கலந்து கொண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. "மில்லியன் மோம்மார்ச் என்ற பெயரில் நடைபெற்ற இப் பேரணிகளில் லட்சக்கணக்கான பெண்கள்கலந்து கொண்டனர். கேபிடல் ஹில் அருகே நேஷனல் மாலில் நடைபெற்ற பேரணியில்8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கிப் பதிவு, துப்பாக்கியில் குழந்தைப் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறுதுப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்றுபேரணியில் கலந்து கொண்ட பெண்கள் கேட்டுக் கொண்டனர். கோரிக்கைகளைவலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் உயர்த்திப் பிடித்துகோஷம் எழுப்பினர். சிலர், துப்பாக்கியால் இறந்த தங்களது குழந்தைகளின்படங்களைக் கொண்டு வந்தனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களில் 4 பேரில் ஒருவர்துப்பாக்கியால் பயமுறுத்தப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. உலகிலேயேதுப்பாக்கியால் அதிகம் பயப்படுபவர்கள் அமெரிக்கர்கள் என்றும், அதிகபட்ச உயிர்பாதுகாப்பு அச்சத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

நேஷனல் மாலில் நடைபெற்ற பேரணியைப் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் மற்றும் அவரது மனைவி ஹில்லாரி கிளின்டன் இருவரும், பேரணியில்கலந்து கொண்டவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X