செயலை விட அதன் பயனை நேசித்தால்!
யாழ். நகரை பிடிக்கும் புலிகளின் முயற்சியை இலங்கை விமானப்படை முறியடித்தது
கொழும்பு:
இலங்கை விமானப் படையின் கடும் தாக்குதல் தொடர்பாக யாழப்பாணம் நகரைப் பிடிக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகஇலங்கை அரசு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்றுவதற்காக கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது.
இந்த சண்டை திங்கள்கிழமை உச்சகட்டத்தை எட்டியது. யாழ்ப்பாணம் நகருக்குள் ஊடுறுவ விடுதலைப் புலிகள் முயன்றனர். ஆனால் இலங்கை விமானப்படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் பின்வாங்கினர். அவர்களது முயற்சி தோல்வியுற்றதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பூநகரியிலுள்ள விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையத்தை ராணுவம் குண்டு வீசி தகர்த்தது. இதனால் புலிகளின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகருக்குள் புலிகள் நுழைவதற்கு வாய்ப்பு உள்ள அனைத்துப் பகுதியிலும் இலங்கை விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுதாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, யாழ்ப்பாணம் நகருக்குள் உள்ள ராணுவத்தினருக்குத் தேவையான உணவு. ஆயுதம் ஆகியவை கிடைப்பதில் எந்தத் தடங்கலும் இல்லைஎன்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடல் மற்றும் வான் மார்க்கமாக இவை தங்குதடையின்றி வழங்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications